பப், சலூன்கள் மீண்டும் திறப்பு… மக்கள் மகிழ்ச்சி

பப்கள் திறக்கப்பட்டன!

இங்கிலாந்தில் லெஸ்டர் தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று பப், தியேட்டர், சலூன்கள் திறக்கப்பட்டன. காலை முதலே மக்கள் மகிழ்ச்சியுடன் பப் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பப், சலூன், சினிமா தியேட்டர் இன்று திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் பப், சலூன், உணவகம், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் இன்று சனிக்கிழமை முதல் இவை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை மீறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சில சலூன்கள் நள்ளிரவிலேயே கடையைத் திறந்தன. பப்கள் காலை வரை காத்திருந்தன.
பொது மக்கள் பொறுப்புணர்வு உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் போரீஸ் ஜான்சன் அறிவுறுத்திய நிலையில் இன்று பப் உள்ளிட்டவை திறக்கப்பட்டதால் மக்கள் காலை முதல் அவற்றுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.

இன்று வெளிப்புற ஜிம்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானங்கள், வெளிப்புற விளையாட்டுக்கள், நூலகம், கம்யூனிட்டி சென்டர், பிங்கோ ஹால், மியூசியம், கேலரி உள்ளிட்டவையும் திறக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் அதிகபட்சமாக 30 பார்வையாளர்களுடன் திருமணங்கள் நடைபெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள் அரங்க ஜிம், நெயில் சலூன், நைட் கிளப் உள்ளிட்டவை உரிய விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தால் அடுத்த வாரமே திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

லெஸ்டரில் பப் உள்ளிட்டவை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பு நடவடிக்கை அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறப்பு தினத்தன்று மேற்கொள்ளப்படுவதைக் காட்டிலும் அதிக அளவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நகர போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.