13 புதிய நகரங்களில் 5ஜி நெட்வொர்க் – O2 வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

O2's 5G network
O2's 5G network

பிரிட்டனின் பிரபல தொலைபேசி நிறுவனமான O2 இன் 5 ஜி நெட்வொர்க்கின் விரிவாக்கத்தால் இங்கிலாந்து முழுவதும் 13 நகரங்கள் பயனடைய உள்ளன.

O2 மொபைல் நிறுவனம் தனது இந்த “புரட்சிகர” 5G நெட்வொர்க் அக்டோபர் 13 இல் தொடங்கிய பின்னர், மேலும் 13 நகரங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறது.

மேலும் படிக்க – லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு – யார் இந்த வைர வியாபாரி நிரவ் மோடி?

இப்போது பிரிஸ்டலில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த “அடுத்த தலைமுறை நெட்வொர்க்கை” அனுபவிக்க முடியும்.

புதிய இடங்கள் எங்கே?

மான்செஸ்டர்
பர்மிங்காம்
கிளாஸ்கோ
லிவர்பூல்
நியூகேஸில்
பிராட்போர்டு
ஷெபீல்ட்
கோவென்ட்ரி
நாட்டிங்காம்
நார்விச்
பிரிஸ்டல்
டெர்பி
ஸ்டோக்

அக்டோபர் 2019 இல் O2 நிறுவனம் 5ஜி நெட்வொர்க்கை பிரிட்டனில் அறிமுகம் செய்தது. அதற்கு முன்னதாக சக போட்டி நிறுவனங்களான EE, வோடபோன் மற்றும்  three ஆகிய நிறுவனங்கள் 5ஜி நெட்வொர்க்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

2020க்கான பிரிட்டனின் டாப் 5 PUBS – உங்க ஏரியாவில் இருக்கா?

முன்னதாக, இந்த 13 புதிய நகரங்களில் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிக்கைக்கு முன்பு, புத்தாண்டு ஈவ் 2019 அன்று பெல்ஃபாஸ்ட், கார்டிஃப், எடின்பர்க், லண்டன், ஸ்லஃப் மற்றும் லீட்ஸ் ஆகியவற்றில் 5ஜி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.