டிசம்பர் 2-க்குப் பிறகும் தீவிர கட்டுப்பாடு – மக்கள் அதிர்ச்சி!

England virus rules, கட்டுப்பாடு, கொரோனா
(Image: Daily Mirror)

டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு கொரோனா முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் புதிய அடுக்கு நிலை கட்டுப்பாடு அமல் ஆவதால் தீவிர கட்டுப்பாட்டின் கீழ் 55 மில்லியன் மக்கள் வருவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் வருகிற 2ம் தேதியுடன் கொரோனா முழு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு பழையபடி மூன்று நிலை கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த எந்த பகுதிக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடு என்று அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

இதில் இங்கிலாந்தின் பெரும்பகுதிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் வருவது தெரியவந்துள்ளது.

மான்செஸ்டர், கென்ட் உள்ளிட்ட மிட்லான்ட்ஸ், வட கிழக்கு, வட மேற்கின் பெரும்பாலான பகுதிகளில் மூன்றாம் நிலை ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

லண்டன், லிவர்பூல் உள்ளிட்ட மற்ற பெரும்பாலான பகுதிகளில் இரண்டாம் நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும்.

ஐல் ஆஃப் வெயிட், கார்ன்வால் மற்றும் ஐசில்ஸ் ஆஃப் ஸ்கில்லி போன்ற பகுதிகளில் மிகக் குறைவான கட்டுப்பாடான முதல் அடுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

டிசம்பர் 16ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் இருக்கும்.

அதன் பிறகு கொரோனா பரவல் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எந்த பகுதிக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடு என்று முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியும் ஏன் எதனால் முதல் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாவது கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பதற்கான காரணத்தைச் சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் விளக்கமாக எழுத்துப்பூர்வமாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நம்பிக்கை அடிவானத்தில் உள்ளது. ஆனால் நாம் அனைவரும் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவில் உள்ளது. எனவே, நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்றார்.

மீண்டும் மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டாலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இரண்டு மற்றும் மூன்றாம் நிலையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

55 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதிக கட்டுப்பாடுகள் கொண்ட பகுதிக்குள் இடம் பெறுவார்கள் என்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter