லண்டனில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி… உதவி கேட்கும் மெட் போலீஸ்!

Appeal, attempted rape, வன்கொடுமை, பாலியல்
சம்பவம் நடந்த பகுதி (Image: Google Street)

வடக்கு லண்டனில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களின் உதவியை மெட் போலீசார் நாடியுள்ளனர்.

கிழக்கு ஃபின்சலியில் 15 வயதான பள்ளி மாணவி ஒருவர் கடந்த மாதம் ஒருநாள் மாலை 5.30 மணி அளவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது காஸ்வே பகுதியில் மூன்று இளைஞர்கள் புகைபிடித்தபடி நின்று கொண்டிருந்தனர்.

சிறுமி அந்த வழியாக வந்த போது யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சிறுமியை தூக்கிக்கொண்டு சந்துக்குள் வந்தனர். அவரது வாயைப் பொத்தி, சிறுமியின் உடையை அவிழ்த்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தனர்.

அவர்களிடமிருந்து சிறுமி தப்பிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. மூன்று பேரும் அந்த சிறுமியை வலிமையாக பிடித்துக் கொண்டனர்.

நல்லவேளையாக அந்த நேரத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அவரைக் கண்ட அந்த மூன்று பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

நடந்ததை உணர்ந்த அவர் அந்த சிறுமியை ஆசுவாசப்படுத்தி, அவரை அழைத்துவந்து கிழக்கு ஃபின்ஞ்ச்லி பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து அவரை பத்திரமாக பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

இதைப் படிச்சீங்களா: கொரோனா ஊரடங்குக்குப் பிறகு வர உள்ள கட்டுப்பாடுகள் தளர்வுகள் என்ன? – வெளியான புது தகவல்

சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் நடந்ததைக் கூறவே, அவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் போலீசாரால் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. இந்த சூழலில் மாணவிக்கு உதவிய 40 வயது மதிக்கத்தக்க நபரின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.

இருப்பினும் அந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் யார் என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்த போது வந்தவர் மெலிதான தேகம் கொண்ட, ஸ்போர்ட்ஸ் கால் சட்டை அணிந்த வெள்ளை நிற நபர் என்று மட்டும் தெரியவந்துள்ளது.

அதே போல் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று பேரும் கறுப்பின இளைஞர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் போலீசாருக்கு உதவும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter

Related posts

லண்டனில் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி – தரமான பாடல்கள் ரெடி

Web Desk

புதர்களில் மறைந்திருந்து புகைப்படம் எடுத்த ஊடகத்தினர் – நோட்டீஸ் அனுப்பி ஹாரி எச்சரிக்கை

Web Desk

ஏழு ஊழியர்களுக்கு கொரோனா… உணவகத்தை மூடிய அக்பர் ரெஸ்டாரண்ட்

Editor