கொரோனா தடுப்பு நடவடிக்கை… 3ம் நிலை கட்டுப்பாடு பகுதிகளில் ராணுவம்

Army, lockdown, ராணுவம், கொரோனா, ஊரடங்கு
கொரோனா தடுப்பு பணியில் ராணுவ வீரர். (Image: bbc.com / PA Media)

இங்கிலாந்தில் 3ம் நிலை கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதார பணியாளர்களுக்கு உதவ ராணுவம் வரவழைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் லிவர்பூல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா மூன்றாம் நிலை கட்டுப்பாடு அமலில் உள்ளது. தற்போது லிவர்பூலில் சுகாதார அதிகாரிகளுக்கு உதவ, கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் தரைப்படை மற்றும் கடற்படை வீரர்கள் வெள்ளிக்கிழமை லிவல்பூல் நகரத்துக்கு வந்துள்ளனர்.

இவர்கள் கொரோனா பாதிப்பு வெளிப்படும் பகுதிகளில் கொரோனா பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்துவது, கட்டுப்பாடு பகுதியில் புதிதாக கொரோனா மிகப்பெரிய அளவில் பரவுவதை தடுப்பது, கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது, விதிமுறைகளை மீறுவதைத் தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தினர் நைட்டிங்கேல் மருத்துவமனையில் மேனிங் பாப்அப் டெஸ்டிங் சென்டரை நிறுவியுள்ளனர். கடந்த வாரம் 100 ஆர்.ஏ.எஃப் வீரர்கள் பர்மிங்ஹாமுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த போது 20 ஆயிரம் ராணுவ வீரர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். 4000 பேர் களத்தில் இறக்கப்பட்டனர்.

அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் இரண்டு நாட்கள் முன்னதாக வாரிங்டன்னில் 3ம் நிலை கட்டுப்பாடு அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கும் ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து யுகே ஸ்டாண்டிங் ஜாயிண்ட் கமாண்டர், லெஃப்டினன்ட் ஜெனரல் தைரோன் உர்ச் கூறுகையில், “இந்த தேசிய முயற்சியை ஆதரிக்க முடிந்ததில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். வரும் குளிர் காலத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ராணுவம் தயாராக உள்ளது” என்றார்.

கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதில் ராணுவம் பயன்படுத்தப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 3ம் நிலை கட்டுப்பாடு பகுதியில் ராணுவம் பயன்படுத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter