குரோய்டன் போலீஸ் நிலைய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்… இளைஞரைக் கைது செய்தது போலீஸ்!

Arrest murder Police , போலீஸ், குரோய்டன்
(Image: MPS HACKNEY)

கடந்த செப்டம்பர் மாதம் குரோய்டன் போலீஸ் நிலையத்தில் காவலர் ஒருவரை விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட நபர் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி சந்தேகத்திற்குரிய இளைஞர் ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த இளைஞன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசார் மீது சுடத் தொடங்கினான். இதில் சார்ஜன்ட் மேட் ரத்தனா மார்பில் குண்டு பாய்ந்தது.

இதில் மேட் ரத்தனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அந்த இளைஞன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் படுகாயம் அடைந்தான்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் 23 வயதான லூயிஸ் டி சோய்சா என்ற அந்த இளைஞனை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

தற்போது முழுவதும் குணமடைந்த நிலையில் லூயிஸ் டி சோய்சாவை மெட் போலீசார் இன்று கைது செய்தனர்.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சைத் தேவைப்படுவதால் அவன் மருத்துவனையில் தங்க வைக்கப்பட்டிருப்பான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் அவன் முழுவதும் குணமடைந்துவிட்டான் என்று அறிவிக்கும் வரையில் மருத்துவமனையில் தங்கியிருப்பான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் ரத்தனா ஓய்வு பெற ஒரு சில மாதங்கள் இருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது பூர்வீகம் நியூசிலாந்து. 1991ம் ஆண்டு முதல் அவர் மெட் போலீசில் பணியாற்றி வந்துள்ளார்.

2021ன் தொடக்கத்தில் ஓய்வு பெற்று நியூசிலாந்து திரும்பி ரக்பி பயிற்சியாளராக வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. அதற்குள்ளாக அவர் லூயிசால் படுகொலை செய்யப்பட்டார்.

மேட் ரத்தனாவின் இறுதிச் சடங்குகள் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெஸ்ட் சசெக்ஸின் ஷோர்ஹாம் பை ஸீ – யில் நடந்தது. இணையத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பலராலும் நேரில் வர முடியாத நிலையில், இணையத்தின் மூலம் பலரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter