கோலர்ஸ்டன்: பூட்டிய வீட்டில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு… கொலையா?

Oxford Ave, Gorleston

கோர்ல்ஸ்டன் ஆன் சீ பகுதியில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து ஆண், பெண் சடத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது என்று நோர்ஃபோக் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோர்ல்ஸ்டன் ஆன் சீ பகுதியில் உள்ள ஆக்ஸ்போர்டு அவென்யூவில் ஒரு வீட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் நிகழ்வு நடப்பதாக நோர்ஃபோக் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் 21ம் தேதி (செவ்வாழக் கிழமை) இரவு  7.30 மணி அளவில் போலீசார் அந்த வீட்டுக்குச் சென்றனர். வீட்டின் கதவைத் திறக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனால், திறக்கப்படவில்லை. இதனால் உள்ளே இருப்பவர்களின் பாதுகாப்புக்காக கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே  சென்றனர். அப்போது வீட்டின் ஒரு அறையில் ஆண், பெண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் எதனால் மரணம் நேர்ந்தது என்று அறிவிக்க முடியாது. சந்தேக மரணமாகக் கருதப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வீடு, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில்தான் மரணம் பற்றிய முடிவை அறிவிக்க முடியும் என்று நோர்ஃபோக் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்கள் யார், அவர்களின் வயது என்ன, தற்கொலை குறிப்பு கிடைத்ததாக, எப்படி இறந்து கிடந்தார்கள், அது தற்கொலை போல உள்ளதா அல்லது கொலைக்கான அடையாளம் ஏதும் தென்படுகிறதா என்பது உள்ளிட்ட எந்த ஒரு தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk