கோவிட் கட்டுப்பாடுகளால் குழப்பம்… மன்னிப்பு கேட்ட பிரதமர் போரிஸ் ஜாசன்சன்!

Boris Johnson, apologises
பிரதமர் போரிஸ் ஜான்சன் (Image: CNN)

லண்டன், செப்டம்பர் 29, 2020: வட கிழக்கு இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல பகுதிகளில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

வட கிழக்கு இங்கிலாந்துக்காக அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தின. ஆறு பேர் விதிமுறைப்படி,

வீடுகளில் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவிர்த்து மற்றவர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் வேறு ஒரு குடும்பத்தினரைச் சந்தித்து உரையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பப் கார்டன் போன்ற இடங்களில் சர்வ சாதாரணமாக இரண்டு, மூன்று குடும்பங்கள் அமர்ந்து பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எக்ஸிடெரில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பிரதமர், “வட கிழக்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் மக்கள் உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆறு பேர் வீடுகளில் அல்லது உணவகங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அந்த குடும்பத்தைச் சேராதவர்களுடன் தொடர்பு வைக்கக் கூடாது” என்று கூறியிருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது போன்ற குறைபாடுகள், குழப்பங்கள் பிரதமரின் முதிர்ச்சியன்மையைக் காட்டுவதாக லேபர் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய இன்றைய பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

வட கிழக்கில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விதி என்பது மக்களை வேறு ஒரு வீட்டுக்குச் சென்று மற்றவர்களைச் சந்திப்பதற்கான தடையாகும்.

இதில் அறைக்குள் அமர்ந்து பேச தடை என்று சொல்வது பப், ரெஸ்டாரண்ட் அல்லது உங்கள் வீடு என எந்த ஒரு இடத்துக்கும் பொருந்தும். பிற குடும்பத்தினருடன் நீங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

இந்த முக்கிய நடவடிக்கை கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதுடன் உங்களை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. நீங்கள் மிகவும் அபாயகரமான பகுதியைச் சார்ந்தவர் என்றால் உள்ளூர் நிர்வாகிகள் கொண்டு வந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter