புதிய கட்டுப்பாட்டுக்குள் செல்லும் லண்டன்… பதில் சொல்ல தெரியாமல் திணறிய போரிஸ்!

லண்டன், அக்டோபர் 16, 2020: 2ம் நிலை கட்டுப்பாடுகள் பற்றி கேள்வி எழுப்பிய போது அது பற்றி சொல்லத் தடுமாறிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ளும்படி கூறினார்.

இன்று நள்ளிரவு முதல் லங்காஷையா மிகக் கடுமையான கட்டுப்பாடு கொண்ட 3ம் நிலைக்கு செல்கிறது.

கிரேட்டர் லண்டன், எசெக்ஸ், ஈரேவாஷ், எல்ம்ப்ரிட்ஜ், நார்த் ஈஸ்ட் டெர்பிஷையர், பரோவ் இன் ஃபர்னெஸ், செஸ்டர்ஃபீல்ட், யார்க் ஆகியவை இன்று நள்ளிரவு முதல் தீவிர கட்டுப்பாடுகள் கொண்ட 2ம் நிலைக்கு செல்கின்றன.

இந்த நிலையில் நடுத்தர நிலையில் தொடரும் கென்ட் பகுதியைச் சேர்ந்த தந்தை ஒருவர், எசெக்ஸில் வசிக்கும் தன்னுடைய மகனைச் சந்திப்பது எப்படி என்று புரியாமல் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் பிரதமர் திணறியது இந்த விதிமுறைகளில் உள்ள குளறுபடிகளைக் காட்டுவதாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று பொது மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது மார்கேட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர், “வேறு கவுன்டியில் உள்ள தங்களின் ஒரே குழந்தையை வழங்கமாக தொடர்புகொள்ளப் பெற்றோருக்கு என்ன வழிகாட்டுதல்களை அரசு வழங்கியுள்ளது?” என்று கேட்டார்.

மேலும், “நான் கென்டில் வசிக்கிறேன். என் மகன் எசெக்ஸில் வசிக்கிறார். நான் இருக்கும் பகுதி 1ம் நிலை கட்டுப்பாட்டிலும் என் மகன் இருக்கும் பகுதி 2ம் நிலை அல்லது மிகத் தீவிர கட்டுப்பாட்டுப் பகுதியிலும் இருந்தால் நாங்கள் எப்படி சந்திக்க முடியும்?” என்றார்.

இதற்கு பதில் அளிக்கத் திணறிய பிரதமர் போரிஸ் ஜான்சன். கென்ட் மற்றும் எசெக்ஸில் என்ன நடக்கிறது, என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் உள்ளன என்பதை நீங்கள் இணையத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பகுதி மிதமான பாதிப்பில் இருந்து தீவிர பாதிப்பு பகுதிக்குள் செல்கிறது என்றால், வீட்டில் சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் உங்கள் இல்லத்தை எப்படி வரையறை செய்கின்றீர்களோ அதன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் இருக்கும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter

Related posts

லண்டன்: திருடிய சைக்கிளை ஆன்லைனில் விற்க முயற்சி… இருவர் கைது!

Editor

சர்ரே: கேஎஃப்சி சிக்கன் வாங்க சென்றவர் கோமாவுக்கு சென்ற பரிதாபம்! – 2 பேர் கைது

Editor

இனி இங்கிலாந்து சாலைகளில் அதிவேகத்தில் பயணிக்கலாம்! – மோட்டார்வே வேக வரம்பு உயருகிறது

Editor