கொரோனா கட்டுப்பாடு… மான்செஸ்டருக்கு பிரதமர் இறுதி எச்சரிக்கை!

Boris Johnson, போரிஸ் ஜான்சன்
பத்திரிகையாளர் சந்திப்பின் போது பிரதமர் போரிஸ் ஜான்சன்! (Image: Facebook)

லண்டன், அக்டோபர் 16, 2020: கொரோனா பரவலைத் தடுக்க அரசு கொண்டு வந்துள்ள நடவடிக்கையை ஏற்காவிட்டால் நான் தலையிட வேண்டியிருக்கும் என்று கிரேட்டர் மான்செஸ்டர் நகருக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, கிரேட்டர் மான்செஸ்டரில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது. அதன் வேகம் மான்செஸ்டரை கல்லறையாக மாற்றிவிடும் என்றும், புதிய கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்தால் நான் தலையிட வேண்டியிருக்கும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கிரேட்டர் மான்செஸ்டரில் மூன்றாம் நிலை அதி தீவிர கட்டுப்பாடுகள் கொண்டுவருவது தொடர்பாக மேயர் ஆண்டி பர்ன்ஹாம் அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.

இது தொடர்ந்தால் விரைவில் கொரோனா முதல் அலை காலத்தில் இருந்ததை விட மிக அதிக அளவிலான எண்ணிக்கையில் நோயாளிகள் மருத்துவமனையில் குவிந்து கிடப்பார்கள்.

அடுத்த இரண்டு வாரங்களில் முதல் அலையின் உச்சத்தை விட அதிக அளவில் நோயாளிகள் இருப்பார்கள். பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படும்.

மான்செஸ்டர் மேயரால் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால் நான் தலையிடுவேன். தேசிய அரசு நிச்சயமாக தன்னுடைய உரிமையை நிலைநாட்டும்.

ஒவ்வொரு பிராந்தியத்தின் தலைவர்களும் ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் தங்கள் பகுதியைக் கொண்டு வருவதில் உள்ள தயக்கத்தை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

எந்த ஒரு இழப்பும் இன்றி நடவடிக்கை எடுக்கக் கூடிய காலகட்டத்தை எல்லாம் தாண்டி மிகத் தொலைவில் நாம் நிற்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் நாம் அனைவரும் இணைந்து, ஆக்கப்பூர்வமாக செயலாற்றினால் விரைவில் வெற்றி பெற முடியும்” என்றார்.

இன்றைய பேட்டியின் போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டதற்காக லங்காஷையர் மற்றும் லிவர்பூல் மண்டலங்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதே நேரத்தில் கிரேட்டர் மான்செஸ்டர் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து வருவதால் அதற்கு இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter

Related posts

கொரோனாவுக்கு எதிரான துரித நடவடிக்கை – இங்கிலாந்து மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

Web Desk

பாதுகாப்பு நாடுகள் பட்டியலில் இருந்து போர்ச்சுக்கல் நீக்கப்படுகிறது?

Editor

லண்டன்: போலீஸ் நிலையத்துக்குள் துப்பாக்கிச்சூடு… காவலர் உயிரிழப்பு!

Editor