ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது பிரட்டன் – 47 ஆண்டுகால உறவுக்கு முற்றுப்புள்ளி

நீண்ட இழுபறிக்குப் பின் அண்மையில் பிரிட்டன் நாடாளுமன்றம் பிரெக்ஸிட் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்த‌து. இதையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது பிரிட்டன்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெள்ளிக்கிழமை வெளியேறியது.

லண்டன் பல்கலைக்கழகங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மாணவர்கள்

பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமா் போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீது வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 621 உறுப்பினர்களும், எதிராக 49 உறுப்பினா்களும் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் முறைப்படி வெள்ளிக்கிழமை வெளியேறியது.

இருப்பினும், பொருளாதார ரீதியில் எந்தவொரு கொள்கையும் வகுக்கப்படாததால், பொருளாதாரம், வா்த்தகம் தொடா்பான விவகாரங்களில் இந்த ஆண்டு இறுதிவரை ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருக்கும்.

பிரிட்டன் வெளியயேறுவதன் மூலம், ஐரோப்பிய யூனியன் உறுப்பினா்களின் எண்ணிக்கை 27-ஆகக் குறைந்துள்ளது.

முன்னதாக, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர்.

அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு விரைவில் விசா – பிரிட்டன்