‘பிரெக்ஸிட்டுக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தில் பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தும்’ – சிஇபிஆர்

UK Latest News: பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தும் உலகப் பொருளாதாரமாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இங்கிலாந்து இருக்கும் என்று நீண்டகால கணிப்புகள் எதிரொலிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்புக்குப் பின்னர் மூன்று ஆண்டுகளில் ‘பிரெக்ஸிட் இருந்தபோதிலும், பிரெஞ்சு பொருளாதாரம் இங்கிலாந்தை முந்த தவறிவிட்டது’ என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) கூறியது. தற்போதை நிலையை வைத்து பார்க்கும் போது, பிரிட்டனின் 2034 க்குள் ‘பிரெஞ்சு பொருளாதாரத்தை விட கால் பகுதி பெரியதாக’ இருக்க வேண்டும், என்று கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் ஆக்கபூர்வமான தொழில்களில் வலுவான செயல்திறன் கொண்ட ஒரு இளம் சமுதாயத்தின் மூலம் இங்கிலாந்து தொடர்ந்து பயனடைகிறது. எவ்வாறாயினும், வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, 2019 ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இன்னும் ஆறு ஆண்டுகளில் ஜெர்மனியையும் 2034 க்குள் ஜப்பானையும் கீழிறக்கி, இந்தியா மூன்றாவது வலிமை மிக்க பொருளாதார நாடாக முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக, ‘2020 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி துரிதப்படுத்தப்படும்’ என்று அது இன்னும் நம்புகிறது – மேலும் அமெரிக்காவுடன் பிரிட்டனின் நெருங்கிய உறவுகள் வரும் ஆண்டுகளில் பயனடைவதைக் காண வேண்டும் என்றும் கூறுகிறது.

2034 க்குள் கனடா உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.