கொரோனா – ஐரோப்பாவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இரண்டாவது நாடானது இங்கிலாந்து

சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியது. அங்கு நாளுக்கு நாள் அதிகரித்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடுகள் திணறி வந்தன.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளால் அந்நாடுகளில் தற்போது நோயில் தாக்கம் படிபடியாக குறைந்து வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் 27,000 பேரும் ஸ்பெயினில் 24,000 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ரூ.1,000-க்கு கொரோனா தடுப்பூசி – இந்தியாவுடன் கைக்கோர்த்த இங்கிலாந்து

இந்நிலையில் ஸ்பெயினின் உயிரிழப்புகளை பின்னுக்குத் தள்ளி ஐரோப்பாவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கண்டுள்ள இரண்டாவது நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது.

இங்கிலாந்தில் ஆரம்ப காலகட்டங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் பின்னாளில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இதுவரை அங்கு 27,510 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதோடு 1,77,454க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய பிரிட்டீஷ் ஏர்வேஸ் முடிவு

தொடர் பாதிப்புகளை குறைக்க அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அரசின் தவறான நடவடிக்கைகளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் இல்லாததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.