‘உங்கள் சேவையால் மிகப்பெரிய மாற்றம்’- உருக்கமாக பொங்கல் வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரிக்கு வேலை தருகிறோம் – பர்கர் கிங் நிறுவனம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”

நமது பிரிட்டன் பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக கட்டிடங்கள் கட்டுவதிலும், நமது பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதிலும், NHSல் நோயாளிகளை பார்த்துக் கொள்வதிலும், சமூக அவலங்களை களை எடுப்பதிலும் என இன்னும் எண்ணற்ற பணிகளில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. உங்களது பணி இங்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது சேவை மூலம் இந்த பூமியில் மிகச் சிறந்த இடமாக வாழவும், வேலை செய்யவும், குடும்பத்தை முன்னேற்றவும் பிரிட்டனை மாற்றியுள்ளீர்கள். இதற்கு நான் தமிழ் சமூக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.

காற்று மாசுபாட்டால் 1,60,000 பேர் உயிரிழக்க வாய்ப்பு – பிரிட்டன் எச்சரிக்கை