35 டார்கெட் ரெடி – ஈரான்! குடிமக்களை மீட்டுக் கொண்டுவர 2 போர்க்கப்பலை அனுப்பிய பிரிட்டன்

Iran
Iran

Resuce Mission: ஈரான் மக்கள் நாயகனாக கொண்டாடப்பட்டவரும், ஈரானிய புரட்சிகர காவல்படைத் தளபதியுமான மேஜர் ஜென்ரல் காஸ்ஸெம் சுலைமானி அமெரிக்காவில் கடந்த ஜன.3ம் தேதி கொல்லப்பட்டார்.

இதனால், ஈரான் முழுவதும் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. தங்கள் நாயகன் கொல்லப்பட்டதற்காக அமெரிக்க படைகள் மீது 35 இடங்களில் தாக்குதல் நடத்த இடம் குறிக்கப்பட்டுவிட்டதாக ஈரான் அறிவித்திருப்பது உலக நாடுகளை கவலை அடைய வைத்துள்ளது.

ஈரான் ஹீரோ காஸ்ஸெம் சுலைமானியை கொன்ற அமெரிக்கா – தர்ம சங்கடத்தில் பிரிட்டன்

இதனால், முஸ்ட்டிக்கில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அவசரமாக இன்று (ஜன.5) நாடு திரும்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் பாதுகாப்பை அதிகரிக்க, HMS Montrose மற்றும் HMS Defender ஆகிய இரு போர்க் கப்பல்களை Strait of Hormuz பகுதிக்கு அனுப்ப பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வேலஸ் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விரண்டு போர்க் கப்பலை அனுப்பி நமது நாட்டு குடிமக்களையும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள நமது கப்பல்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி குடிமக்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர 50 வீரர்கள் அடங்கிய SAS படையையும் பிரிட்டன் அனுப்பியுள்ளது.

பிரிட்டன் செல்ல எத்தனை வகை விசா உள்ளன தெரியுமா?

ஈராக்கின் Islamic State படைகளை ஒழிக்க, ஈராக் ராணுவத்திற்கும், குர்திஷ் படைகளுக்கும் 1,400 பிரிட்டன் வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். தவிர, பல பிரிட்டனின் பல முக்கிய அதிகாரிகளும் அங்கு தங்கியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வரப்படுவார்கள் என்று பிரிட்டன் அரசு உறுதி அளித்துள்ளது.