‘ஐக்கிய அரபு அமீரகம் செல்கையில் இவற்றை கட்டாயம் தவிருங்கள்’ – பிரிட்டன் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பாடி லோஷன், இ-சிகரெட் போன்ற பொருட்களை எடுத்துச் செல்வது கூட, சிறைக்கு செல்லும் அளவுக்கு சிக்கலில் மாட்டிவிட வாய்ப்பிருப்பதாக, பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது.

கஞ்சா செடியில் காணப்படும் சிபிடி எனப்படும் பொருள், வலி நிவாரணியாக பயன்படக்கூடியதாகும். கஞ்சாவில் போதை தரும் பொருளான டி.ஹெச்.சி. என்பது, சிபிடி-யில் மிகமிகக்குறைவாக இருப்பதால் ஐரோப்பிய நாடுகளில் சட்டபூர்வமாக விற்கப்படுகிறது.

மேலும் படிக்க – ஏடிபி டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய கிரேட் பிரிட்டன்!

மேலும், டி.ஹெச்.சி. இல்லாத சிபிடி, அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சிபிடி கலந்த சோப்புகள், மாஸ்சரைசர்கள், ஐ லைனர்கள், லிப்ஸ்டிக்குகள் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் சட்டபூர்வமாக விற்கப்படுகின்றன.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிபிடி என்பது தடை செய்யப்பட்டதாகும்.

இந்நிலையில், பாடி லோஷன்கள், இ-சிகரெட் நிரப்பிகளில், சிபிடி இருக்கலாம் என்பதால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவற்றை எடுத்துச் செல்வது சிக்கலுக்கு வழிவகுத்துவிடும் என பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அலுவலகம் எச்சரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் தனது நாட்டு பயணிகளுக்கு பிரிட்டன் அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. போதைப் பொருட்கள் விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு கடும் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறது.

மேலும் படிக்க – இங்கிலாந்தில் சிறந்த உயர்க் கல்விக்கு கிடைக்கும் ஊக்கத் தொகை – முழு விவரம் இங்கே

தடை செய்யப்பட்ட பொருளை மிகச்சிறிய அளவில் எடுத்துச் சென்றால் கூட, குறைந்தது நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு வழிவகுத்துவிடும்.

போதைப் பொருட்களை எடுத்துச் செல்வது மட்டுமல்ல, பயணிகளின் ரத்ததத்தில் போதைப்பொருள் கலந்திருந்தால் கூட ஐக்கிய அரபு அமீரக அரசு அதை கடுமையாக அணுகுகிறது.