இங்கிலாந்தில் கருப்பு உடையில் சுற்றும் மர்ம மனிதன் – போலீஸ் விசாரணை (வீடியோ)

covid 19 lockdown, corona virus, uk corona virus, கொரோனா வைரஸ், பிரிட்டன் தமிழ் செய்திகள், லண்டன் தமிழ் செய்திகள், இங்கிலாந்து தமிழ் செய்திகள்

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் நார்விச் நகரின் ஒரு பகுதியிலுள்ள தெருக்களில் கடந்த சில வாரங்களாக உடலை முழுதும் மறைக்கும் விதமாக கருப்பு நிற அங்கி, தொப்பி, பூட்சுடன் மர்ம மனிதர் ஒருவர் நடமாடி வருகிறார். ஊரடங்கின் காரணமாக அப்பகுதி மக்கள் வீட்டில் முடங்கி கிடைக்கும் வேளையில் அவர்கள் இந்த மர்ம மனிதரை கண்டு பயந்து போயுள்ளனர்.

தெருவில் நடமாடும் மர்ம மனிதனை வீடியோ எடுத்து பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா – ஐரோப்பாவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இரண்டாவது நாடானது இங்கிலாந்து

இதனையடுத்து அந்த மனிதர் அணிந்துள்ள அங்கி, 17-ம் நூற்றாண்டின் போது இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவிய சமயத்தில் மருத்துவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அணிந்த அங்கி மற்றும் முகக் கவசம் போல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியிலுள்ள ஒருவர் கூறுகையில், ‘கடும் வெயில் அடிக்கும் நேரத்தில் இது போன்ற உடையணிந்து ஒருவர் ஏன் நடந்து செல்ல வேண்டும்?. அதுமட்டுமில்லாமல் இப்பகுதி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர்’ என தெரிவித்துள்ளனர்.

ரூ.1,000-க்கு கொரோனா தடுப்பூசி – இந்தியாவுடன் கைக்கோர்த்த இங்கிலாந்து

அந்த மர்ம நபர் காரணமாக எந்த தவறான செயல்களும் அப்பகுதியில் நடைபெறவில்லை. இருந்தபோதும் மக்கள் பயந்து போயுள்ளதால் அந்த நபரை விரைவாக அடையாளம் கண்டு விசாரிக்க போலீசார் அந்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பின் பெயரில் அந்த நபர் அந்த உடையணிந்து சென்றிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.