இன்று வெளியாகிறது முழு ஊரடங்கு அறிவிப்பு? – அமைச்சரவையுடன் அவசர ஆலோசனையில் பிரதமர்!

PM, England, lockdown, போரிஸ் ஜான்சன், முழு ஊரடங்கு

இங்கிலாந்தில் முழு ஊரடங்கு பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் பிரதமர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இங்கிலாந்தில் மூன்று நிலை ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இப்போதும் கூட அரசு எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், ஒரு நாளைக்கு 4000 இறப்பு என்ற நிலைய எட்டக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குளிர் காலத்தில் மட்டும் 85 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நான்கு வார முழு ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

மீண்டும் ஒரு முழு ஊரடங்கை இங்கிலாந்து சந்தித்தால் அது இங்கிலாந்து பொருளாதாரத்தின் மிகப்பெரிய அழிவாக இருக்கும் என்று வர்த்தகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தொற்று தொடர்பாக என்.ஹெச்.எஸ் புள்ளிவிவரங்கள் பிரதமருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடுவில் எல்லா மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முழுக்க தொற்று நோயாளிகள் எண்ணிக்கை, மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது குறைய ஜனவரி மாதம் மையப்பகுதி வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் நேரத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் அத்தனை பேருக்கும் சிகிச்சை அளிக்கும் நிலையில் என்.ஹெச்.எஸ் இல்லை என்பதையும் ஆவணங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதைத் தொடர்ந்தே, மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வரும் முடிவு தனக்கு இல்லை என்று கூறி வந்த பிரதமர் போரிஸ் ஜான்சனும்  முழு ஊரடங்குக்கு தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கட்கிழமை உள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று 5 மணிக்கு பிரதமர் நிருபர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் ஏற்கனவே புதிய வடிவிலான முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஐரோப்பா முழுவதும் தொற்று மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மற்ற நாடுகளும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter