வேலை இழப்பைத் தடுக்க வேட்-ஐ ரத்து செய்த ரிஷி சுனக்! – தப்புமா உணவு விருந்தோம்பல் துறை?

Rishi Sunak
ரிஷி சுனக் கோப்புப் படம்!

கொரோனா வைரஸ் காரணமாக உணவு சேவைத் துறையில் ஏற்பட்டுள்ள வேலை இழப்புகளைத் தடுக்கும் வகையில் 30 பில்லியன் பவுண்ட் அளவுக்கு வேட் தள்ளுபடியை சான்ஸ்லர் ரிஷி சுனக்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. உணவு விற்பனை சேவைத் துறையில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்து வருகின்றன. பலரும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் விருந்தோம்பல் துறையில் பல்வேறு அதிரடி சலுகைகளை நிதி அமைச்சர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அதன்படி ஆகஸ்ட் மாதம் வெளியே உணவு உட்கொள்பவர்களுக்கு 50 சதவிகித தள்ளுபடி, ஊழியர்களை மூன்று மாதங்களாக வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு ஊழியர் ஒருவருக்கு 1000 பவுண்ட் போனஸ் என்று அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைத் தக்க வைக்க சலுகை, வரிவிலக்கு என்று பல சலுகைகளை அறிவித்துள்ளார். ஈட் அவுட் டு ஹெல்ப் அவுட் திட்டம் மூலம் உணவகம், ஃகபே, பப்களில் சென்று சாப்பிட ஊக்கம் அளிக்கப்படுகிறது. திங்கள், புதன் கிழமைகளில் வெளியே சென்று சாப்பிடுபவர்களுக்கு நபர் ஒருவருக்கு 10 பவுண்ட் வரை 50 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும்.

விருந்தோம்பல் துறையை பிரதிநிதித்துவப் படுத்தும் இங்கிலாந்தில், விருந்தோம்பல் துறையில் மீண்டும் பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் ஈடுபட இந்த நலத்திட்ட அறிவிப்புகள் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ள மக்களை மீட்க பிரிட்டானியர்கள் ஒவ்வொருக்கும் 500 பவுண்ட் மதிப்பிலான வவுச்சர்கள் வழங்கப்படும். சிறுவர்களுக்கு 250 பவுண்ட் வவுச்சர் வழங்கப்படும்.

இந்த உதவித் திட்டம் அக்டோபருக்குப் பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று கருத்து நிலவுவதை அவர் மறுத்துள்ளார். மக்களுக்கு தவறான நம்பிக்கையை அளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வேலையில் வைத்திருக்க ஊக்கத் தொகை திட்டத்தின் மூலம் ஊழியர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப அரசுக்கு 9.4 பில்லியன் பவுண்ட் செலவாகும் என்று கூறியுள்ளார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க 2.1 பில்லியன் பவுண்ட் செலவில் கிக் ஸ்டார்ட் திட்டம் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் பல சலுகைகளை அவர் அறிவித்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.