லண்டன் உள்ளிட்ட பகுதிகள் நள்ளிரவு முதல் 4ம் நிலை கொரோனா கட்டுப்பாட்டின் கீழ் செல்கிறது! – போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

Christmas rules tightened, கொரோனா

லண்டன் உள்ளிட்ட தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிகள் பல புதிய நான்காம் நிலை கொரோனா கட்டுப்பாட்டின் கீழ் இன்று நள்ளிரவு முதல் செல்கிறது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மீண்டும் கொரோனா ஆர் நம்பர் ஒன்றுக்கு மேல் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வடக்கு அயர்லாந்து கிறிஸ்துமஸ் முடிந்த அடுத்த நாள் முதல் ஆறு வாரங்களுக்கு முழு ஊரடங்கைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த சூழலில் இங்கிலாந்திலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கிறிஸ்துமஸ் கட்டுப்பாடுகளை அறிவித்தார். அவர் கூறியதாவது:

“கிறிஸ்துமஸை ஒட்டி வழங்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் தென் கிழக்கு இங்கிலாந்தின் பெரும்பகுதிகளுக்கு நீக்கப்படுகிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து பகுதிகளுக்கு தளர்வு நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.

நள்ளிரவு முதல் லண்டன், கென்ட், எசெக்ஸ் மற்றும் பெட்ஃபோர்ட்ஷையர் பகுதிகளுக்கு புதிதாக நான்காம் நிலை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஐந்து நாள் தளர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டுமே தளர்வுகள் இருக்கும்.

அதே நேரத்தில் நிலை நான்கின் கீழ் உள்ளவர்கள் தங்கள் வீட்டைச் சார்ந்தவர்கள் தவிர்த்து மற்றவர்களுடன் உள் அரங்கில் சந்திப்பை நிகழ்த்துவது தடை செய்யப்படுகிறது.

நான்காம் நிலை கட்டுப்பாடு என்பது இங்கிலாந்தின் இரண்டாம் முழு ஊரடங்கை போன்றதாக இருக்கும். கென்ட், பக்கிங்ஹாம்ஷையர், பெர்ஷயர், சர்ரே (வேர்லியைத் தவிர்த்து), கோஸ்போர்ட், ஹவந்த், போர்ட்ஸ்மவுத், ரோதர், ஹேஸ்டிங்ஸ் ஆகிய பகுதிகளுக்கும் நான்காம் நிலை கட்டுப்பாடு பொருந்தும்.

இந்த புதிய கட்டுப்பாடுகள் எந்த அளவுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். இருப்பினும் இந்த பெருந்தொற்று காலம் முழுவதும் நாம் அறிவியல் சொல்வதன் படி நடக்க வேண்டியுள்ளது.

அறிவியல் மாறும்போது, நாமும் நம்முடைய நிலைய மாற்ற வேண்டியள்ளது. கொரோனா வைரஸ் தன்னுடைய தாக்குதலை மாற்றும்போது, நாமும் அதை எதிர்கொள்ளும் முறையில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter