பள்ளி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா

Corona Infection rates, கொரோனா,

இங்கிலாந்தில் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த நவம்பர் 5ம் தேதி இரண்டாவது முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து பரவலாக கொரோனாத் தொற்று விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

கொரோனா தொற்று விகிதம் கடந்த செப்டம்பர் மாதம் இருந்ததைப் போன்று ஒன்று என்ற அளவில் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நவம்பர் 14ம் தேதியுன் முடிவடைந்த ஒரு வாரத்தில் வட மேற்கு, மத்திய இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று விகிதம் குறைந்துள்ளது. ஆனால் தென் கிழக்கு மற்றும் லண்டனில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா: இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்ட ஸ்வாமி சிலைகள் தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது!

இங்கிலாந்தின் கொரோனாத் தொற்று பரவல் ஆர் விகிதம் 1 மற்றும் 1.1 என்ற அளவில் உள்ளது. இளைஞர்கள் மத்தியில் கொரோனாத் தொற்று குறைந்தாலும், பள்ளி மாணவர்கள் மத்தியில் தொற்று அதிகரித்துள்ளது என அது தெரிவித்துள்ளது.

ஓ.என்.எஸ் ஒவ்வொரு வாரமும் மருத்துவமனைகள் மற்றும் கேர் ஹோம்களில் உள்ளவர்களைத் தவிர்த்து வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்து புள்ளிவிவரங்களைத் திரட்டி வருகிறது.

இதன் படி இங்கிலாந்தில் 80ல் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. ஸ்காட்லாந்தில் 155ல் ஒருவருக்கும், வேல்சில் 154ல் ஒருவருக்கும், வடக்கு அயர்லாந்தில் 135ல் ஒருவருக்கும் தொற்று உள்ளதாக அது தெரிவித்துள்ளது.

வேல்சில் அக்டோபர் மாத இறுதியில் கொரோனா உச்சத்தைத் தொட்டது. தற்போது இரண்டு வாரங்களில் தொற்று விகிதம் சற்று குறைந்துள்ளது.

இந்த நிலையில் அரசு அறிவிப்புப் படி வியாழக்கிழமை 22,915 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53,775 ஆக அதிகரித்துள்ளது.

லண்டன் உள்ளிட்ட இடங்களில் தொற்று பரவல் கவலை அளித்தாலும், ஒட்டு மொத்த அளவில் தொற்று குறைந்திருப்பது நிம்மதியை அளிக்கும் வகையில் உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter