மோசமான உணவுப் பழக்கம் கொரோனா உயிரிழப்புக்கு காரணம் – இங்கிலாந்து வாழ் இந்திய மருத்துவர்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கு ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் எச்சரித்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவர் அசீம் மல்கோத்ரா.

இவர் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை துறையில் பணியாற்றி வருகின்றார். கொரோனா வைரஸ் மரணங்களால் பல்வேறு நாடுகளும் நிலைக்குலைந்து வரும் நிலையில், ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்களின் பின்னணியில் முக்கிய காரணமாக உள்ளதாக எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக மருத்துவர் அசிம் மல்கோத்ரா கூறியதாவது, உடல் பருமன் மற்றும் அளவுக்கு அதிகமான உடல் எடை ஆகியவை கொரோனா இறப்புக்களுக்கு பின்னணியில் உள்ள ஒரு வெளிப்படையான பிரச்னையாகும். இதற்கு தீர்வு காண்பது அவசியமாகும். இதன் காரணமாக இந்தியா, குறிப்பாக கொரோனாவால் அதிகம் பாதிக்கக்கூடிய சூழல் உள்ளது.

பிரிட்டன் பிரதமர் மகன் பெயர் காரணம் என்ன தெரியுமா? மருத்துவர்கள் வியப்பு

இந்தியாவில் வாழ்வியல் முறையால் ஏற்படக்கூடிய நோய்கள் அதிகமாகும். கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் அவசியமாகும். குறிப்பாக இரண்டாவது வகை நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை கொரோனா நோய் தாக்குதல் காரணமாக மரணத்தை ஏற்பட செய்யும் அபாயம் உள்ள நோய்களாகும்.

உடலில் அதிகப்படியான கொழுப்பு காரணமாக இவை ஏற்படுகின்றன. வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் நோய்களும் இவற்றில் அடங்கும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் கொரோனா வைரசால் அதிகமான உயிரிழப்பு விகிதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இறப்புக்களில் பெரும்பாலானவை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளுடன் தொடர்பு இருக்கும் வாய்ப்பு நிலவுகின்றது.

வெளிப்படையான கடினமான பிரச்னை என்னவென்றால், பல நாடுகளில் மக்கள் தொகையின் அடிப்படையில் பொது ஆரோக்கியம் என்பது கொரோனா பரவத் தொடங்குவதற்கு முன்பே மிகவும் மோசமான நிலையில் தான் இருந்தது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மூத்தவர்கள் உடல்பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்கள். ஆரோக்கியமான எடை கிடையாது.

ஆனால் ஆரோக்கியமான மனிதர் உண்டு. ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதன் மூலமாக இந்த வளர்ச்சிதை மாற்ற சுகாதார அளவீடுகளை நம்மால் பெறமுடியும். இதனை சீராக பராமரிப்பதன் மூலமாக கொரோனா வைரசை எதிர்க்கொள்ளலாம். வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு முறை மாற்றங்கள் நல்ல பயனைக் கொடுக்கும்.

இங்கிலாந்தில் 50 சதவீதம் பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட உணவுகள் தான் பயன்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவிலும் இதே நிலைதான் இந்த உணவுகள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது.

இங்கிலாந்தில் கருப்பு உடையில் சுற்றும் மர்ம மனிதன் – போலீஸ் விசாரணை (வீடியோ)

இதுபோன்ற உணவு பொருட்களை உட்கொண்டவர்களின் உடல்களில் கொரோனா வைரசை எதிர்கொள்ளும் அளவிற்கு போதுமான நோய்எதிர்ப்பு சக்தி இல்லை
எனவே தான் இந்தியர்கள் இதுபோன்று பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை தவிர்க்கும்படி அறிவுறுத்துகிறேன். இதை தவிர இந்தியர்கள் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்கின்றனர். இது மிகவும் அபாயகரமானது. இந்த உணவுகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதனால் இரண்டாவது வகை சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றன.

இந்த நோய்கள் உள்ளோரை கொரோனா தாக்கும்போது மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. மாவு மற்றும் அரிசி உணவுகளை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்வதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே இதுபோன்ற உணவுகளை குறைவாக எடுத்துக்கொண்டு காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு இறைச்சி, முட்டை மீன்களை சாப்பிடலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.