இங்கிலாந்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 861 பேர் பலி

corona virus, uk tamil news

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்தியா அனுப்பிய பாராசிட்டமால் மாத்திரை மருந்தகங்களில் கிடைக்கும் – பிரிட்டன் அரசு

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 21 லட்சத்து 78 ஆயிரத்து 149 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 329 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா கடந்த சில வாரங்களாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்துவருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்சை தொடந்து தற்போது இங்கிலாந்தில் வைரஸ் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பு – பிரிட்டன் அரசிடம் உதவி கேட்கும் விலைமாதர்கள்

தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 4 ஆயிரத்து 617 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 861 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 729 ஆக அதிகரித்துள்ளது.