ஓ.என்.எஸ் அதிர்ச்சி புள்ளிவிரம்… கொரோனா கட்டுப்பாடு வளையத்துக்குள் வரும் லண்டன்!

Office for National Statistics (ONS)
(Image: Google Map)

லண்டன், செப்டம்பர் 25, 2020: இங்கிலாந்தில் ஒரே வாரத்தில் 60 சதவிகிதம் அளவுக்கு கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளது என்றும் பரவும் வேகம் அதிகரித்துள்ளது என்றும் ஓ.என்.எஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

லண்டன் நகரிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 19க்குப் பிறகான வாரத்தில் இங்கிலாந்தில் தினசரி 9,600 என்ற அளவில் தொற்று ஏற்பட்டு உள்ளதாக தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

முந்தைய வாரத்தில் இது 6000ம் என்ற அளவிலிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இந்த தொற்று தொடர்பான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட விவரப்படி வெள்ளிக்கிழமை புதிய உச்சமாக 6874 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட கிழக்கு இங்கிலாந்தில் குறிப்பாக லண்டன் நகரிலும் கூட  கொரோனா தொற்று விகிதம் அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் பல பகுதிகளில் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

கார்டிஃப் மற்றும் ஸ்வான்சீ கவுண்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 6 மணிக்குப் பிறகு லாக்டவுன் விதிமுறைகள் அமலுக்கு வருகின்றனர்.

லீட்ஸ், ஸ்டாக் போர்ட், வீகன் மற்றும் பிளாக்பூலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சந்திப்பது உள்ளிட்டவற்றுக்கு தடை அமலுக்கு வருகிறது.

லண்டன் நகரிலும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. கவலைக்குரிய பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்கள் அலுவலகம் கணக்கின் படி இங்கிலாந்தில் தற்போது 103,600 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அதாவது 500 வீடுகளுக்கு ஒருவர் என்ற கணக்கில் தொற்று உள்ளது. இந்த எண்ணிக்கை என்பது மருத்துவமனைகள் மற்றும் கேர் ஹோம்களில் உள்ள நோயாளிகளைத் தவிர்த்த கணக்கு என்பது கூடுதல் கவலைக்குரிய தகவல் ஆகும்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter