கொரோனா 2ம் அலை இளைஞர்களை பாதிக்கும்! – நிபுணர்கள் எச்சரிக்கை

England virus rules, கட்டுப்பாடு, கொரோனா
(Image: Daily Mirror)

இந்த குளிர் காலத்தில் இங்கிலாந்து எதிர்கொள்ளப் போகும் கொரோனா இரண்டாம் கட்ட அலையில் அதிக அளவில் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் இளைஞர்கள் மத்தியில் கொரோனா அச்சம் இல்லை. முகக் கவசம் அணிய அரசு வற்புறுத்தினால் அதை வைத்து நிர்வாணமாக நடந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். பொது இடங்களில் முகக் கவசம் இன்றி சுற்றுகின்றனர். திடீர் இசை நிகழ்ச்சிகளை நடத்தி கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் இரண்டாம் அலை கொரோனா பரவலில் பாதிக்கப்படப் போவது இளைஞர்கள்தான் என்று ராயல் சொசைட்டி ஆஃப் மெடிசனின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் தெரிவித்துள்ளார். அவர் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய சூழல்களைப் பார்க்கும்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை இன்னும் இரண்டு வாரங்களில் ஏற்படலாம். தற்போது ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா அவுட்பிரேக்ஸ் ஐரோப்பா கண்டனம் முழுவதும் பரவலுக்கு தயாராகிவிட்டது என்பதையே காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

1918ம் ஆண்டு ஸ்பேனிஷ் ஃபுளு பரவிய போது அது யு வடிவ கர்வை ஒத்திருந்தது. தற்போது கொரோனா வரைபடம் டபிள்யூ போல இருக்கும். அதாவது இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிப்பை எதிர்கொள்வார்கள். இளம் வயதினர் என்றால் 25 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேராசிரியர் கிர்பி கூறுகையில், உடல் பருமன் இரண்டாம் பரவலின் போது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும். இதை நாடு எதிர்கொள்ள வேண்டும். கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் தங்களை ஃபிட்டாக மாற்றிக்கொள்ள வேண்டும். உடல் எடை குறைப்பு கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க உதவும். இதே போன்று பல மருத்துவர்களும் அரசுக்கு எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk