கொரோனா தடுப்பூசி வீரியம் மிக்க புதிய வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படும்! – பயோஎன்டெக் நம்பிக்கை

corona vaccine doses, கொரோனா, தடுப்பூசி
(Image: Dado Ruvic / Reuters)

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தில் புதிதாக பரவி வரும் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக ஓரளவுக்கு பலன் அளிக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் புதிய பரிணாம வளர்ச்சி அடைந்து அதிக வீரியத்துடன் கூடிய கொரோனா வைரஸ் கிருமி வேகமாக பரவி வருகிறது. இதனால், 40க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்துடனான பயண தொடர்பை துண்டித்துள்ளன.

இங்கிலாந்தில் தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் சூழலில், அது பலன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. லட்சக் கணக்கான டோஸ் கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்து வாங்கி குவித்துள்ள சூழலில் அது பற்றி பயோஎன்டெக் வெளியிட்டுள்ள கருத்து அதிர்ச்சி ரகமாக அமைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கும் பயோஎன்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உகூர் ஷாஹின் ஜெர்மனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, “தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியே புதிய வகை கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கலாம்.

அப்படியே அளிக்காவிட்டாலும் கூட தடுப்பூசி தொழில்நுட்பத்தில் சிறிய மாற்றம் செய்தாலே போதுமானது. ஒருவேளை மாற்றம் செய்ய வேண்டிய தேவை இருந்தால் எங்கள் நிறுவனம் உனடியாக அதை மேற்கொள்ளும்.

ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி என்பதால் புதிய மியூட்டேஷனை மிக விரைவாக எதிர்கொள்ள முடியும்.

அதே நேரத்தில் புதிய வைரஸ் கிருமிக்கு எதிராக கொரோனா தடுப்பூசி முழுமையாக பயன்தருமா என்பது பற்றி தற்போதைய நிலையில் தனக்கு தெரியாது. இது பற்றி ஆய்வு நடக்கிறது” என்று கூறினார்.

புதிய வகை கொரோனா கிருமி முந்தயதைக் காட்டிலும் 70 சதவிகிதம் வேகமாக பரவக் கூடியதாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேகமாக பரவினாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று கூறப்படுகிறது.

உயிரிழப்பை அதிகம் ஏற்படுத்தாது என்றாலும், 70 சதவிகிதம் வேகமாகப் பரவும் என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் மிக விரைவாக இந்த கிருமி பரவி விடும்.

இந்த கிருமி ஏற்படுத்தும் பாதிப்பு பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதனால், இந்த புதிய கிருமி பற்றிய பயம் மட்டுமே உள்ளது.

தடுப்பூசியை மட்டும் நம்பினால் பலன் இல்லை, சமூக விலகல், மாஸ்க், பொது சுகாதாரம் போன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே கொரோனாவை நம்மால் எதிர்கொள்ள முடியும்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter