குரோய்டன்: மேலும் 2 காவலர்களை சுட்டுக் கொல்ல முயன்ற பயங்கரவாதி! – வெளியான அதிர்ச்சி தகவல்

London, Police
(Image: London News Pictures)

லண்டன், செப்டம்பர் 26, 2020: தெற்கு லண்டன் குரோய்டன் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற பயங்ரவாதி ஒருவன், மேலும் இரண்டு பேரை கொல்ல முயன்றதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் கஸ்டடி மையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் ஒருவர் சுட்டதில் போலீஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த குற்றவாளி தன்னைத்தானே சுட்டுக் கொண்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சம்பவம் பற்றியும் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி பற்றியும் பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

சுட்டுக் கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் மெட் ரத்தனா (வயது 54) என்று தெரியவந்துள்ளது.

ஓய்வு பெற சில மாதங்களே உள்ள நிலையில் அவர் கொல்லப்பட்டது அவரது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணி அளவில் சந்தேகத்துக்குரிய அந்த நபரை  அழைத்து வந்துள்ளனர்.

கையில் பின்புறமாக விலங்கிடப்பட்டிருந்த நிலையில், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். இதில் சார்ஜன்ட் ரத்தனாவின் மார்பில் குண்டு பாய்ந்தது.

மேலும் இருவர் மீது சுட அந்த நபர் முயற்சி செய்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். ஐந்து முறை அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

கடைசியாக தன்னுடைய கழுத்துப் பகுதியில் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த குற்றவாளி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சந்தேகத்துக்குரிய நபர் போதை மருந்து மற்றும் ஆயுதங்களை திருட்டுத் தனமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தபோதே அந்த சந்தேகத்துக்குரிய நபரின் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியைச் சோதனை செய்து எடுக்க ஸ்பெஷல் கான்ஸ்டபிள்ஸ் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

(Image: Instagram)

உயிரிழந்த போலீஸ் அதிகாரி சார்ஜன்ட் ரத்தனா நியூசிலாந்தின் ஹாக்ஸ் பேவைச் சேர்ந்தவர்.  1989ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வந்தவர். லண்டன் ஐரிஷ் அணிக்காக ரக்பி விளையாடி உள்ளார். 1991ம் ஆண்டு முதல் மெட்ரோபாலிடன் போலீசில் பணியாற்றி வந்துள்ளார். 2015ம் ஆண்டு முதல் குரோய்டனில் பணியாற்றி வந்துள்ளார்.

2021ம் ஆண்டு தொடக்கத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்று நியூசிலாந்து திரும்பி ரக்பி பயிற்சியாளராக மாறப் போவதாக சக பணியாளர்களிடம் அவர் கூறி வந்துள்ளார். என்னுடைய உடல் ஆரோக்கியம் மற்றும் பிட்னெசில் அதீத அக்கரை செலுத்தி வந்துள்ளார். அது தனக்கு உற்சாகத்தை அளிப்பதாக அவர் கூறுவாராம். உயிரிழந்த சார்ஜன்ட் ரத்தனாவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter