போதை பழக்கம்… உயிரிழந்த கல்லூரி மாணவிகள்! – திண்டாடும் போலீஸ்

Devastated mum daughters, போதை

போதை மருந்து பழக்கம் காரணமாக நியூகேஸில் பல்கலைக் கழக மாணவிகள் இரண்டு பேர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்த விவகாரத்தில் அது என்ன வகையான போதை மருந்து என்று கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

18 வயதான ஜெனி லார்மோர் கடந்த அக்டோபர் மாதம் நியூகேஸில் பல்கலைக் கழகத்தில் தன்னுடைய அறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் கண்டறிந்த சில மணி நேரத்துக்கெல்லாம் மற்றொரு 18 வயதான மாணவி ஸ்டீபனி சில்லிஃபாண்டும் இறந்து கிடப்பதை கண்டறிந்தனர்.

நாத்தம்பரியா பல்கலைக் கழக மாணவர் நதானியேல் பாவ்லோவிக் (21) என்பவரும் அதே வாரத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இதில் ஜெனியின் அறையில் கேட்டமைன் என்ற போதை மருந்து கண்டறியப்பட்டது. ஆனால், நதானியேல் மற்றும் ஸ்டெஃபானி என்ன மாதிரியான போதை மருந்து எடுத்துக் கொண்டார்கள் என்பதை போலீசாரால் இன்னும் கண்டறிய முடியவில்லை.

இவர்கள் தவிர டைன் மற்றும் வேர் நகரைச் சேர்ந்த மார்க் ஜான்ஸ்டனும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கொடுமையான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. பல்கலைக் கழகம் திறக்கப்படவே, அந்த மாணவிகளை அவர்களது அம்மாக்கள்தான் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் திரும்பிய ஒரு சில மணி நேரத்தில் அவர்களின் மரணச் செய்தி அவர்களை வந்தடைந்துள்ளது. மேலும், உடல்களை அடையாளம் காட்டும்படி போலீசார் கூறியுள்ளார்.

சில மணி நேரங்களுக்கு முன்பு பல்கலைக் கழகத்தில் இறக்கிவிட்டுச் சென்ற பெண்கள் இப்படி உயிரற்ற உடலாகக் கிடக்கிறார்களே என்று இரு பெண்களின் அம்மாக்களும் கதறியுள்ளனர்.

இந்த நான்கு பேர் மரணம் தொடர்பாக போதை பொருட்களை விற்பனை செய்து வந்தவர்கள் உள்ளிட்ட 11 பேரை நார்த்ம்ப்ரியா போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் தலைமை ஆய்வாளர் ஸ்டீவ் வைக்ஸ் கூறுகையில், “ஒரு வார இறுதியில் நான்கு இளம் வயதினர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியது.

எங்கள் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. எதனால் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதை உறுதியாக நிறுவும் ஆய்வு நடக்கிறது.

எந்த ஒரு சூழலிலும் தங்கள் குழந்தைகள் போதைப் பொருளை எடுத்துக் கொள்ளாமல் காக்க வேண்டும் என்று பெற்றோர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

இதை படிச்சீங்களா: எட்டு பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற நர்ஸ்… 9 குழந்தைகளை கொல்ல முயன்றதாக கைது!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter