ஸ்பெயினிலிருந்து வருபவர்களுக்கு கட்டாய சுய குவாரன்டைன்… சுற்றுலா பயணிகள் கொந்தளிப்பு

கொரோனா, விமான, போக்குவரத்து

ஸ்பெயினிலிருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களுக்கு இரண்டு வாரக் கட்டாய சுய தனிமைப்படுத்தல் திடீரென்று அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் கொரோனா இரண்டாவது கட்டப் பரவலைத் தடுக்க அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது. அரசின் முயற்சிகள் மக்களுக்கு அதிருப்தியை மட்டுமே தருகின்றன என்பதை நடப்பு நிகழ்வுகள் காட்டுகின்றன.

தற்போது ஸ்பெயினில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அங்கு 900 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அரசு அவசர அவசரமாக ஸ்பெயினில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களுக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. பொது சுகாதாரமே எங்களின் முக்கிய நோக்கம் அதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த புதிய விதிமுறைகளை ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ள அனைத்து இங்கிலாந்து குடிமக்களும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்று திரும்புகிறவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஸ்பெயினுக்கு சென்று திரும்பிய மைக்கேல் வில்சன் என்பவர் கூறுகையில், “அரசின் புதிய விதி காரணமாக ஸ்பெயினில் இருந்து திரும்பிய என்னுடைய பெண் நண்பர் தற்போது 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. இந்த 14 நாட்களுக்கு வேலைக்கு செல்ல முடியாது. வருமானம் இல்லை. ஸ்பெயினில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் கொரோனா சுய தனிமைப்படுத்தல் விதியை அமல்படுத்தியது நியாயம் இல்லை” என்றார்.

ஸ்பெயினில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள மற்றொரு பயணி கூறுகையில், “என்னடைய காதலினின் 30வது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக வந்தோம். தற்போது மீண்டும் பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். நான் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். என் ஆண் நண்பருக்கும் பணிகள் உள்ளன. எங்களால் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக முடியாது” என்றார்.

மருத்துவர் ஒருவர் கூறுகையில், “கொரோனா தடுப்பு பணியில் முக்கிய நபராக பணியாற்றினேன். தனியார் மருத்துவமனையின் மருத்துவராக உள்ளேன். விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் புதிய விதிமுறை பற்றிய தகவல் கிடைத்தது. நான்தான் குடும்பத்தின் முக்கிய பணம் சம்பாதிக்கும் நபர். என்னால் மாதத்தின் பாதி சம்பளத்தை விட்டுக்கொடுக்க முடியாது” என்றார்.

மற்றொரு சுற்றுலாப் பயணி கூறுகையில், “திடீரென்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள கூட நேரம் அளிக்கப்படவில்லை. இதனால் ஸ்பெயினுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து மக்கள் பீதியில் உள்ளனர்” என்றார்.

கொரோனா என்பது அவசர நிலை, யாருக்கு பரவும், பரவாது என்பதை எல்லாம் யோசித்து அறிவிக்க முடியாது. ஸ்பெயினில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாரம் கழித்து அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்றால், அதற்குள்ளாகவே இங்கிலாந்து முழுவதும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk