தென்னாப்பிரிக்க மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து – அதுவும் இன்னிங்ஸ் வெற்றியோடு!!

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி வென்றது. இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்றது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு499 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பதவி விலகினாலும் ஹாரி இன்னும் இளவரசர் தான்; ஆனால்….! மேகனின் நிலைமை?

தென்.ஆ., அணி முதல் இன்னிங்சில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் தென்.ஆ., அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்து 188 ரன்கள் பின் தங்கியிருந்தது.

கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்.ஆ., அணிக்கு பிளாண்டர் (13) நிலைக்கவில்லை. அடுத்து வந்த ரபாடா (16), நார்ட்கே (5) வந்த வேகத்தில் பெவிலியம் திரும்பினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் கேசவ் மஹராஜ் அதிரடி காட்டினார். இங்கிலாந்து பவுலர்களை பதம் பார்த்த மஹராஜ், இவருக்கு பேடர்சன் நல்ல கம்பெனி கொடுத்தார்.

தென்.ஆ., அணி இரண்டாவது இன்னிங்சில் 237 ரன்கள் எடுத்த போது மஹராஜ் 71 ரன்னில் ரன் அவுட்டானானர். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 71 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோரூட் 4 விக்கெட்டும், மார்கவுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் வருகிற 24-ம் தேதி தொடங்குகிறது.

அப்பவே அப்படி! calamityக்கும் catastrophyக்கும் புது அர்த்தம் கற்பித்த வின்ஸ்டன் சர்ச்சில்