‘சண்ட போடாதீங்கப்பா’ – மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

Image Credit - AP
Image Credit - AP

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மேயால் வெற்றிகரமாக செய்து முடிக்க இயலவில்லை. இதனால் அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை (பிரதமரை) தேர்வு செய்யும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 55 வயதான முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் பிறகு, மீண்டும் இந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை முன்னிலைப்படுத்தி இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அக்கட்சி 364 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

1987-ம் ஆண்டுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இதன் மூலம் போரிஸ் ஜான்சன் வெற்றிகரமாக தனது ஆட்சியை தக்கவைத்து மீண்டும் பிரதமரானார்.

(Video Credit – Evening Standard)

இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அவர் மக்களுக்கு வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், “அனைவரும் இந்த கிறிஸ்துமஸ் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். இந்த நாளில் நம்மை காக்கும் பொருட்டு, விடுப்பு எடுக்காமல் பணி செய்து கொண்டிருக்கும் பாதுகாவலர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அதேபோல், நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கும் நமது நன்றியை உரித்தாக்குவோம். அவர்கள் வீட்டில் இன்று நாற்காலி காலியாக இருக்கும். அவர்களது குடும்பத்தினருக்கு நன்றி.

அதேவேளையில், இந்த நாளில் உங்கள் குடும்பத்தினருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்காதீர்கள் யாருடனும் வாக்கு வாதத்தில் ஈடுபடாதீர்கள்” என்று தெரிவித்தார்.