வடக்கு லண்டன் பூங்காவில் பலருக்கு கத்திக்குத்து… ஆபத்தான நிலையில் இருவர் – ஒருவர் கைது!

Finsbury Park

ண்டனில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பிரைட்டன் மருத்துவமனை துப்புறவு பணியாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ஃபின்ஸ்பரி பூங்காவில் சிலருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடக்கு லண்டனில் உள்ள ஃபின்ஸ்பரி பூங்காவில் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டி வருவதாகவும் சிலரை கத்தியால் குத்தியதாகவும் போலீசாருக்கு இன்று பிற்பகல் 2.40 மணி அளவில் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஒருவர் கத்திக்குத்துக் காயத்துடன் இருப்பதை கண்டனர். உடனடியாக மருத்துவப் பணியாளர்கள் உதவிக்கு அழைக்கப்பட்டனர்.

இது குறித்து மெட்ரோபாலிடன் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஃபின்ஸ்பரி பூங்காவில் சிலர் மோதலில் ஈடுபட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போது சிலர் கத்திக்குத்து காயத்துடன் அவதியுறுவதைக் கண்டனர். அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமான காயம் இல்லை. அதனால், உடனடியாக மருத்துவப் பணியாளர்கள் அங்கு அழைக்கப்பட்டனர்.

மருத்துவப் பணியாளர்கள் வந்தபோது அங்கு மேலும் சிலர் காயங்களுடன் இருப்பது தெரிந்தது. மூன்று ஆம்புலன்சில் மருத்துவப் பணியாளர்கள் வந்தனர். நான்கு பேருக்கு சம்பவம் நடந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட ஒருவரும், கையில் காயம் அடைந்த மற்றொரு நபரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

சம்பவம் குறித்து அந்த பகுதியிலிருந்த நபர் ஒருவர் கூறுகையில், “காயம் பட்ட சிலருக்கு மருத்துவப் பணியாளர்கள், போலீசார் உதவி செய்து கொண்டிருந்த போது, ஒரு நபரை மட்டும் போலீசார் பிடித்து அழைத்து சென்றதைப் பார்த்தேன். அவரும் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்தார். அவருக்கு 30 வயது இருக்கும். கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞர். பழைய ஆடையை அணிந்திருந்தார். இதுதான் நான் பார்த்தது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk