அப்பவே அப்படி! calamityக்கும் catastrophyக்கும் புது அர்த்தம் கற்பித்த வின்ஸ்டன் சர்ச்சில்

சிக்கலான கேள்விகளுக்கும் சாமர்த்தியமாகவும் நகைச்சுவையாகவும் பதில் சொல்வது ஒரு கலை.

இங்கிலாந்து பிரதமராக சர்ச்சில் இருந்தபோது, லண்டனில் பெரும் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் இது பற்றிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், “வெள்ளப் பேரழிவுக்கு அரசு எடுத்துள்ள நிவாரண நடவடிக்கைகள் போதாது. calamity (பேரழிவு) க்கும் catastrophy (பெரும்பேரழிவு) க்கும் உள்ள வித்தியாசம் பிரதமருக்குத் தெரியவில்லை” என்றார்.

மேலும் படிக்க – அரச குடும்பத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய ஹாரி – மேகன்! இனி அவர்கள் Royal Highness கிடையாது

சர்ச்சில் உடனே, “ஏன் தெரியாது? நன்றாகவே தெரியும். தேம்ஸ் நதியில் எதிர்க்கட்சித் தலைவர் தவறி விழுந்துவிட்டால் அது calamity. அப்போது அவரை யாராவது காப்பாற்றிவிட்டால் அது catastrophy” என்று சொன்னார். எதிர்க்கட்சியினர் உட்பட எல்லாரும் ரசித்துச் சிரித்தனர்.

நன்றி – இரா.குமார்