வில்ட்ஷயர்: கட்டுப்பாட்டை மீறி வீட்டின் மீது மோதிய கார்… 4 இளைஞர்கள் பரிதாப பலி!

Wiltshire Police
(Image: Wiltshire Times/SWNS.COM)

வில்ட்ஷயரில் கார் ஒன்று அதிவேகமாக வீடு ஒன்றி மீது மோதி தீப்பிடித்ததில் நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வில்ட்ஷயரின் கால்னே அருகே டெர்ரி ஹில்லில் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் கார் ஒன்று வேகமாக வந்து வீட்டின் சுவற்றில் மோதி சேதத்தை ஏற்படுத்தியது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்துக் கொண்டது.

இந்த விபத்தில் வீட்டில் உள்ளே இருந்தவர்களுக்கு காயம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். வீட்டின் உரிமையாளர் காவல் மற்றும் தீயணைப்பு – மீட்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து வீட்டில் இருந்தவர்களைக் காப்பாற்றினர்.

தீயணைப்பு வீரர்கள் வரும் போது கார் எரிந்து கொண்டிருந்தது. அதில் பயணித்த நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலர் டீன் ஏஜ் மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

அதிவேக பயணத்தால் விபத்து என்று போலீஸ் தரப்பில் கூறவில்லை. ஆனாலும், பொது மக்கள் இந்த பகுதியில் வேகம் ஒரு மிகப்பெரிய பிரச்னையாகவே உள்ளது. வேகக் கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் உள்ளூர் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.

அந்த பகுதியைச் சேர்ந்த பில் டான்ஸ்லி என்பவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், “வில்ட்ஷயர் கவுன்சில் எப்போதுதான் வேகக் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்குமோ… எப்போதுதான் அதிகபட்சமாக மணிக்கு 30 மைல் வரைக்கும் மட்டுமே பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடுமோ…

ஒவ்வொரு நாள் இரவும் ரேஸ் நடப்பது போலவே உள்ளது. அதிலும் வார இறுதி நாட்களில் இது அதிகமாக உள்ளது. போலீசார் இப்படி அதிவேகத்தில் பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டுமோ” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk