அனுமதியற்ற பார்ட்டி வேண்டாம்! – மாணவர்களுக்கு கிரேட்டர் மான்செஸ்டர் போலீஸ் எச்சரிக்கை

(Image: dailymail.co.uk)

தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் மான்செஸ்டர் நகரில் மாணவர்கள் திடீர் பார்டிகள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி மகிழ்ச்சியான தருணத்தை மோசமானதாக மாற்றிவிட வேண்டாம் என்று மான்செஸ்டர் போலீஸ் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

கிரேட்டர் மான்செஸ்டரின் உதவி தலைமை கான்டபிள் நிக் பெய்லி இது குறித்து கூறுகையில், “இந்த வாரம் ஏ கிரேட் முடிவுகள் வெளி வருகின்றன என்பதை நான் அறிந்துள்ளேன். இதை மாணவர்கள் கொண்டாட விரும்புகின்றனர்.

இருப்பினும் மாணவர்கள் கிரேட்டர் மான்செஸ்டரின் பல பகுதிகளில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏ கிரேடு முடிவுகள் கொண்டாட்ட மனநிலையானது அபராதம் உள்ளிட்ட வற்றால் துயரமானதாக மாறிவிட வேண்டாம். வீடுகளில் கொண்டாட்டங்கள், சட்ட விரோத கூடுதல்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.

சமீப காலமாக 17, 18 வயது இளைஞர்கள், இளம் பெண்கள் அதிக அளவில் ஒன்று கூடல், அனுமதியற்ற பார்ட்டி போன்றவற்றுக்காக ஒன்று கூடுவது அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து கூடுதல் எச்சரிக்கை வெளியிடப்படுகிறது. மக்கள் எங்கெல்லாம் விதிமுறைகளை மீறுகிறார்களோ அங்கு எல்லாம் நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

கொரோனாத் தொற்று மீண்டும் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிரேட்டர் மான்செஸ்டரில் ஊரடங்கு விதிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 7 முதல் 9ம் தேதி வரையிலான மூன்று நாட்களில் மட்டும் கிரேட்டர் மான்செஸ்டர் போலீசாருக்கு சட்ட விரோத ஒன்று கூடல் தொடர்பாக 1106 புகார்கள் வந்துள்ளன.

இதில் 540 புகார்கள் வீடுகளில் நடந்த பார்டிகள் தொடர்பானது. 48 பப்களில் நடந்த விதிமுறை மீறல் தொடர்பானது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk