லண்டனில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து… ஒருவர் பலி – உயிருக்கு போராடும் பெண்!

Hackney shooting Woman, துப்பாக்கிச், துப்பாக்கிச் சூடு, லண்டன்
(Image: LONDON 999)

லண்டனில் நேற்று ஒரே நாளில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து என இரு வேறு சம்பவங்களில் 20 வயது இளைஞர் உயிரிழந்தார். 30 வயது பெண்மணி உயிருக்கு அபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லண்டனில் நேற்று நடந்த கத்திக்குத்து சம்பத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

லண்டன் லம்பேத், எஸ்.டபிள்யு 2, ராமிலீஸ் க்ளோஸ் பகுதிக்கு நேற்று மாலை 6 மணி அளவில் ஆம்புலன்ஸ் சேவை உதவி கோரப்பட்டது.

இளைஞர் ஒருவருக்கு மிகத் தீவிர கத்திக் குத்துக் காயம் ஏற்பட்டுள்ளது என்று போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர்.

ஏர் ஆம்புலன்ஸ் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் அங்கு வந்த போது, 20 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார். அவரை பரிசோதனை செய்த அவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இளைஞர் பற்றிய விவரங்களை சேகரித்த போலீசார் உயிரிழப்பு குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

தாக்கியது யார், எதற்காக இந்த கொலை நடந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் பற்றி தகவல் தெரிந்தால் போலீசாரிடம் தெரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா: லண்டனில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி… உதவி கேட்கும் மெட் போலீஸ்!

இந்த சம்பவம் நடந்து இரண்டு மணி நேரம் கழித்து லண்டனின் ஹாக்னியில் துப்பாக்கிச்சூடு ஒன்று நடந்துள்ளது. இரவு 8.52 மணி அளவில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டனர்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த பெண்மணி யார், இவர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது யார் என்பது உள்ளிட்ட எந்த ஒரு விவரத்தையும் போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter