அரச குடும்பத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய ஹாரி – மேகன்! இனி அவர்கள் Royal Highness கிடையாது

Image Credit - The Newyork Times

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த 2018 மே 19-ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேகன் மெர்கலை காதல் திருமணம் செய்து கொண்டார். வெள்ளையின தந்தை, கருப்பின தாய்க்கு பிறந்த மேகன் மெர்கலுக்கு அரச குடும்பத்தினர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதால் அரச குடும்பத்தினர் பொதுமேடைகளில் அவதூறாக பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை வதந்தி என்று வழக்கம்போல் இங்கிலாந்து அரச குடும்பம் அறிவித்தது.

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரிக்கு வேலை தருகிறோம் – பர்கர் கிங் நிறுவனம்

எனினும், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரியும் மேகன் மெர்கலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். அரச பரம்பரை சொத்து வேண்டாம் என்றும் சொந்தமாக உழைத்து முன்னேறுவோம் என்றும் இருவரும் உறுதிபட கூறியிருந்தனர்.

இளவரசர் ஹாரி – மெக்கலின் முடிவு குறித்து கடந்த திங்கட்கிழமையன்று (13.01.2020) இங்கிலாந்து ராணி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ஹாரி மற்றும் மெக்கலின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், அரச குடும்பம் இதற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே ஹாரி-மேகன் தம்பதி இனி பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இல்லை எனவும், இனி அவர்கள் Royal Highness என்ற பட்டத்துடன் அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.