புதர்களில் மறைந்திருந்து புகைப்படம் எடுத்த ஊடகத்தினர் – நோட்டீஸ் அனுப்பி ஹாரி எச்சரிக்கை

இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறியுள்ள ஹாரி மற்றும் அவரது மனைவில் மேகன் குழந்தையுடன் கனடாவில் உள்ள விக்டோரியா சொகுசு வீட்டில் குடியேறியுள்ளனர். நிம்மதியாக புதிய வாழ்க்கையைத் தொடங்க நினைத்த ஹாரிக்கு புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்பவே அப்படி! calamityக்கும் catastrophyக்கும் புது அர்த்தம் கற்பித்த வின்ஸ்டன் சர்ச்சில்

மறைந்த இளவரசி டயானாவின் இளைய மகனான ஹாரி அம்மாவைப் போல ராஜ வாழ்க்கை வேண்டாம் என்று முடிவெடுத்து வெளிவந்துள்ளார். ஆனால் அவரது தற்போதைய வாழ்க்கையைப் படம் எடுத்து பத்திரிகையில் வெளியிட பல ஊடகத்தினரும் முயன்று வருகின்றனர். சிலர் அவர் வீட்டின் புதர்களில் மறைந்திருந்து ஹாரியை புகைப்படம் எடுத்து வெளியிட்டும் வருகின்றனர். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஹாரி, இனி மறைந்திருந்து புகைப்படம் எடுத்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.

அதுமட்டுமின்றி, தனது வக்கீல்கள் மூலம் ஹாரியும், மேகனும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, இனி இதுபோன்று செயல்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

சில ஊடகத்தினர் புகைப்படம் எடுக்க முயன்றபோது ஏற்பட்ட கார் விபத்தில்தான் டயானா உயிரிழந்தார். டயானா அரண்மனையை விட்டு வெளியேறியதும் அவர் சொந்த வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டினர்.

பதவி விலகினாலும் ஹாரி இன்னும் இளவரசர் தான்; ஆனால்….! மேகனின் நிலைமை?

இதனால், ஊடகங்களில் அவர் பற்றிய செய்திக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும் என்பதால், புகைப்படக்காரர்கள் அவரைத் துரத்தித் துரத்தி புகைப்படம் எடுத்தனர். அப்படியான ஒரு துரத்தலில்தான் டயானா சென்ற கார் விபத்துக்குள்ளானது.