இங்கிலாந்தில் பரவலாக கன மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Storm Alex
போர்ட்ரீத்தின் பிரபல மங்கி ஹட் பகுதியில் ஆர்ப்பரிக்கும் அலை! (Image: Greg Martin / Cornwall Live)

லண்டன், அக்டோபர் 3, 2020: அலெக்ஸ் புயல் காரணமாக இங்கிலாந்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்பர் நிற அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தெற்கு இங்கிலாந்தில் அலெக்ஸ் புயல் காரணமாக பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து கிழக்கு ஸ்காட்லாந்து, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், தென் மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்சின் பெரும்பாலான பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் அம்பர் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த பகுதிகளில் மிகத் தீவிரத்துக்கு சற்று குறைவான மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எக்செஸ் பகுதியில் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் காரில் சென்ற குடும்பத்தினர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் நான்கு பேரையும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

இதைத் தொடர்ந்து  வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை கொட்டித் தீர்த்த மழை காரணமாக எக்ஸ்மூர் பகுதி பாதிக்கப்பட்டது. லிஸ்கோம்பில் 36 மணி நேரத்தில் 84 மி.மீ மழையும் பிரெண்டன் ஹில்லில் 74.4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இன்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் இயக்கப்படும் நேரத்தை மாற்றி அமைப்பதாக ஸ்காட்ரயில் தெரிவித்துள்ளது.

சூறைக் காற்று காரணமாக ஸ்காட்லாந்து, வெஸ்ட் மிட்லாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

வெள்ளம், மின் விநியோகத்தில் தடை எனப் பல பிரச்னைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter