யார்க்‌ஷேயர்: டவலில் சுற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்!

(Image: Asadour Guzellian)

மேற்கு யார்க்‌ஷேயரில் பீச் துணியால் சுற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குப்பை சுழற்சி மையத்தில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படிச் செய்த இரக்கமில்லாத தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்கு யார்க்‌ஷேயரின் பிராட்போர்டில் உள்ள பவுலிங் பேக் லேன் பகுதியில் இருந்து போலீசாருக்கு அவசர அழைப்பு வந்தது. அங்கு குப்பை கழிவு மையத்தில் டவல் ஒன்றால் சுற்றப்பட்ட நிலையில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த ஊதா நிற பீச் டவலில் கடற்கரை, மீன்கள், பனை மரம், ஒட்டகம் ஓவியம் இருந்தது. அந்த டவலின் மாதிரி படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த குழந்தையின் தாயார் யார் என்று கண்டுபிடிக்க முடியும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் பாலினம் பற்றிய தகவலை போலீசார் வெளியிடவில்லை. குழந்தையின் தாய் பிராட்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். “குழந்தையின் தாயாரைக் கண்டறிவதும் அவருக்கு தேவையான சரியான மருத்துவ மற்றும் மன நலன் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதே எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிராட்போர்டு கவுன்சில் தலைவர் சூசன் ஹிஞ்ச்லிஃப் கூறுகையில், “இது இதயத்தை உடைக்கும் செய்தியாகும். எங்கள் இரங்கலையும் பிரார்த்தனைகளையும் குழந்தையின் பிரிவால் வாடும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பவுலிங் பே லேனில் உள்ள மறுசுழற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த குழந்தையை கண்டெடுத்ததில் எங்கள் சுழற்சி மைய ஊழியர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உளவியல் உதவிகள் வழங்கப்படுவதும், போலீசாருக்கு எங்கள் தரப்பில் இருந்து முழுமையான தகவலை அளிப்பதுமே எங்களின் முன்னுரிமையாக உள்ளது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk