இங்கிலாந்தில் கிறிஸ்துமசுக்கு முன்பு கொரோனா முடிய வாய்ப்பே இல்லை! – நிபுணரின் எச்சரிக்கை

UK, Covid, Indian

ருகிற நவம்பரில் அல்லது குறைந்தபட்சம் கிறிஸ்துமசுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு நீங்கிவிடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், கிறிஸ்துமசுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் பிரச்னை முடிய வாய்ப்பே இல்லை என்று நிபுணர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.

இங்கிலாந்தில் தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளது. ஆனால் வரும் குளிர் காலத்தில் கொரோனாத் தொற்று மீண்டும் அதிகரிக்கும். அப்போது முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிக பாதிப்பு, உயிரிழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். உயிரிழப்பு மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கொரோனா பரவலை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். கொரோனா பரிசோதனை செய்யும் திறனை அதிகரிக்க, மருத்துவ சேவையை கட்டமைக்கக் கிட்டத்தட்ட 300 கோடி பவுண்ட் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். மேலும், நவம்பர் மாதத்தில் அல்லது குறைந்த பட்சம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வெல்கம் டிரஸ்ட் இயக்குநர் பேராசிரியர் சர் ஜெர்மி ஃபர்ரர், அவுஸ் ஆஃப் காமன்ஸ் சுகாதாரக் குழுவிடம், “தடுப்பூசி கண்டறியப்படாவிட்டால் கிறிஸ்துமஸை தாண்டியும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் வரை கூட பாதிப்பு இருக்கலாம்” என்று எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த உலகம் கொரோனாவுடன் வாழ பழக வேண்டும். இது நம்மைவிட்டு நீங்க பல ஆண்டுகள் ஆகும். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டாலும் கூட அது நிரந்தர தீர்வு அளிக்கும் என்று கூற முடியாது. எனவே, கொஞ்சம் காலத்துக்கு கொரோனாவுடன் இணைந்துதான் வாழ வேண்டியிருக்கும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk