லண்டன் அருகே ஸ்லிங்டன் சிறுவர் விளையாட்டு மைதானம் பகுதியில் துப்பாகிச்சூடு! – மக்கள் அதிர்ச்சி

வடக்கு லண்டன் ஸ்லிங்டன் பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

லண்டன் அருகே உள்ள ஸ்லிங்டன் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் அருகே பிற்பகல் 3.20 மணி அளவில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் ஸ்லிங்டன் வெஸ்ட்போர்ன் எஸ்டேட் பகுதியில் குவிந்தன.

தற்போது அந்த பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்ததை மெட் போலீஸ் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். ஆனால் என்ன நடந்தது என்ற முழு விவரத்தை அவர்கள் வெளியிடவில்லை. அந்த பகுதியில் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று தரையிறங்கியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

லண்டன் ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகளிடம் இது குறித்து விசாரித்தபோது, “எங்களுக்கு பிற்பகல் 3.21 மணிக்கு ஸ்லிங்டன் அட்லஸ் பகுதியில் இருந்து அழைப்பு வந்தது. எங்கள் மருத்துவக் குழுவுடன் ஆம்புலன்ஸை அங்கு அனுப்பி வைத்தோம். நான்கு நிமிடங்களில் எங்கள் மருத்துவக் குழுவினர் அங்கு வந்துவிட்டனர். வான் ஆம்புலன்ஸ் சேவைக்கும் ஏற்பாடு செய்திருந்தோம். இவ்வளவு விரைவாக ஏற்பாடுகள் செய்தும் ஒரு நபர் இறந்துவிட்டார்.

இது குறித்து மெட் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “ஜூலை 4ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.20க்கு எங்களுக்கு ரோமன் வே என்7ல் இருந்து துப்பாக்கிச்சூடு நடப்பதாக தகவல் வந்தது. அங்கு அதிகாரிகள் விரைந்து சென்ற போது 20 வயது மதிக்கத்தக்க நபர் துப்பாக்கிச்சூடு காயத்துடன் இருந்தார். அவரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இது தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. துப்பறியும் குழு அங்கு விரைந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

மூன்று மாதத்துக்குப் பிறகு லண்டனில் இன்று பப், ரெஸ்டாரண்ட், சலூன் உள்ளிட்டவை திறக்கப்பட்டது. முதல் நாளே நகரில் ஆங்காங்கே விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.