ஏழு படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த சீன் கோன்னெரி காலமானார்!

Bond, actor, dies, சீன் கோன்னெரி, காலமானார்
FROM RUSSIA WITH LOVE, Sean Connery, 1963.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சீன் கோன்னெரி இன்று காலமானார்.

பழைய ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றவர் சீன் கோன்னெரி. ஸ்காட்லாந்தில் பிறந்த இவர் பஹாமாஸில் வாழ்ந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய 90வது பிறந்த நாளை அவர் கொண்டாடி இருந்தார்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தில் லாரி ஓட்டுநர் மற்றும் சலவைத் தொழிலாளியின் மகனாக பிறந்தார் சீன். இளம் வயதில் சவப்பெட்டிகளுக்கு பாலிஷ் போடுவது, பால் விற்பனை செய்வது, பாதுகாவலர் என பல பணிகளைச் செய்துள்ளார்.

வளர்ந்த பிறகு லாரி ஓட்டுநர் மற்றும் குழந்தை பராமரிப்பாளராக இருந்துள்ளார். அதன் பிறகு உடற்பயிற்சியில் ஆர்வம் ஏற்பட்டு உடலை ஃபிட்டாக வைத்தார்.

Bond, actor, dies, சீன் கோன்னெரி

சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. 1962 முதல் 71ம் ஆண்டு வரை வெளியான ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவர் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார். இண்டியானா ஜோன்ஸ் படத்தில் இண்டிக்கு அப்பாவாக நடித்துள்ளார்.

ஒரு ஆஸ்கர், இரண்டு பஃப்தா, மூன்று கோல்டன் குளோப் விருதுகளை இவர் பெற்றுள்ளார். 2000ம் ஆண்டில் அவருக்கு நைட்வுட் (சர்) பட்டம் வழங்கப்பட்டது.

2006ம் ஆண்டில் நடிப்பில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார். 2011ல் இருந்து பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகி இருந்து வந்தார்.

சில காலங்களுக்கு முன்பு ரேடியோ டைம்ஸ் யார் இதுவரை வந்தவர்களில் சிறந்த ஜேம்ஸ் பாண்ட் என்று ஆய்வு நடத்தியது. இதில் 14,000 பேர் பங்கேற்றனர். இவர்களில் 56 சதவிகிதம் பேர் சியன்னை சிறந்த ஜேம்ஸ் பாண்ட் என்று தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன் கோன்னெரி மறைவையொட்டி ஸ்காட்லாந்து முதல்வர் நிக்கோலா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை படிச்சீங்களா: முழு ஊரடங்கை மீண்டும் கொண்டு வந்தால் இங்கிலாந்து சீரழியும் என்று வணிகர்கள் எச்சரிக்கை!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter