பிரிட்டனுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் ஜப்பான் பேரரசர்

ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ வரும் மாதங்களில் பிரிட்டனுக்கு அரசு முறையாக பயணம் மேற்கொள்ளயுள்ளார் என பிரிட்டிஷ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜனவரி 31-ஆம் தேதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற உள்ள நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வந்த அழைப்பை ஏற்று ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசியும் பிரிட்டனுக்கு செல்ல உள்ளதாகவும், அங்கு அவர்கள் லண்டனுக்கு மேற்கே உள்ள விண்ட்சர் கோட்டையில் தங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

‘காலம் மாற்றும்; விருப்பத்தை மதிக்கிறோம்’ – இளவரசர் ஹாரி வெளியேற்றத்திற்கு ராணி ஒப்புதல்

1952 முதல் அரியணையில் இருக்கும் 93 வயதான ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சியின் கீழ் பிரிட்டனின் மூன்றாவது ஜப்பானிய அரசு பயணமாகும். பிரிட்டன் இளவரசி 1971 இல் பேரரசர் ஹிரோஹிட்டோவையும் 1998 இல் அவரது மூத்த மகன் பேரரசர் அகிஷிட்டோவையும் விருந்து அளித்து கெளரவித்துள்ளார். பிறகு எலிசபெத் மகாராணி மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோர் 1975 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டனர்.

ப்ரெக்ஸிட் பிறகு, வர்த்தக ஒப்பந்தங்களை நடத்த பிரிட்டன் உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை நடத்த பிரிட்டன் முயற்சிக்கும்.

இந்நிலையில், கலாச்சார, இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை உறுதிப்படுத்தும் முயற்சியில் பிரிட்டன் ஈடுபடும் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டனுக்கு கடைசியாக சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாப்பாட்டின் மீது ஒரு கண் வையுங்கள்.. பார்வை பறிபோகலாம் – பிரிட்டன் ஆய்வு எச்சரிக்கை