போதையில் இரண்டு குழந்தைகளின் தந்தையைக் குத்திக் கொலை செய்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை!

15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ரவீந்தர் (Image: West Midlands Police)

போதையில் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் மது வாங்குவதில் ஏற்பட்ட மோதலில் இரண்டு குழந்தைகளின் தந்தையைக் குத்திக் கொலை செய்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி இந்தியவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளரான ரவீந்தர் ஹீர் (37) என்பவர் போதை மருந்து எடுத்துக் கொண்டு தள்ளாட்டத்துடன் வடக்கு பர்மிங்காமில் உள்ள டிப்பார்ட்மெண்ட் ஸ்டோருக்கு வந்துள்ளார். அங்கு மது ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவருக்கும் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரைச் சேர்ந்த க்ரைஸ் டாலே என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர். (Image: West Midlands Police)

இதில் ஆத்திரம் அடைந்த ரவீந்தர் ஹீர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து க்ரைஸ் மீது குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிரைஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆத்திரம் அடங்காத ரவீந்தர் ஹீர், கிரைஸ் டாலேவின் காரை எடுத்துக் கொண்டு சென்றார். கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் துப்பாக்கி முனையில் ரவீந்தரை போலீசார் கைது செய்தனர். போதையில் இருந்த ரவீந்தர் கொலையை மறுத்தார். போதை தெளிந்த நிலையில் அதை ஒப்புக்கொண்டார். மேலும், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் ரவீந்தருக்கு எதிராக அமைந்திருந்தன.

கடந்த மார்ச் மாதம் இது தொடர்பான வழக்கு விசாரணை பர்மிங்ஹாம் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது. இன்று ரவீந்திருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

கொலை குறித்து கிரைஸ் டாலே குடும்பத்தினர் கூறுகையில், “டாலே எப்போதும் உண்மையான நபராக, கடின உழைப்பாளியாக, அன்புக்குரிய மகனாக, தந்தையாக, நண்பனாக இருந்தார். குடும்பத்தின் மகிழச்சிக்கு காரணமான நபராக இருந்தார்.

முகத்தில் எப்போதும் புன்னகையோடு இருப்பார். சோகமான மனநிலையில் உள்ளவர்கள் கூட அவருடன் இருந்தால் மகிழ்வான நிலைக்கு வந்துவிடுவார்கள். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இனி அவர்களை அவரால் காணவே முடியாது. தங்கள் தந்தை கூறும் சில்லி ஜோக்குகளை இனி கேட்க முடியாது. டாலேக்கு நிகழ்ந்ததற்கு எங்களுக்கு எப்போதுமே நீதி கிடைக்காது. அவருடைய மகள்கள் மூலமாக அவர் இன்னும் உயிர் வாழ்கிறார்” என்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk