லீட்ஸ் கொரோனா அதிகரிப்புக்கு இளைஞர்கள்தான் காரணம்! – அதிரடி குற்றச்சாட்டு

சட்ட விரோத ரேவ் நிகழ்ச்சி. (Image: PA/lbc.co.uk)

லீட்ஸ், 5 செப்டம்பர் 2020: லீட்ஸில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க இளைஞர்களின் பொறுப்பற்ற வீட்டு பார்ட்டி நிகழ்ச்சிகள்தான் காரணம் என்று சுகாதாரத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டின் மிகவும் கவலைக்குரிய கவனிக்கத்தக்க பகுதியாக லீட்ஸ் மாறிவிட்டது. இதற்கு காரணம் இங்கு ஒரு லட்சம் பேருக்கு 32.5 என்ற அளவில் கொரோனா பரவல் விகிதம் உள்ளதே காரணம்.

இதற்கு காரணம் அதிக அளவில் இளைஞர்கள் ரேவ், இசை நிகழ்ச்சி, வீடுகளில் அனுமதியற்ற பார்டிகள் நடத்தியதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

லீட்ஸில் கொரோனா உறுதி செய்தவர்களில் அதிகப்படியானோர் 18 வயது முதல் 34 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதே இதற்கு காரணம்.

இது குறித்து நகர சபை தலைவர் ஜூடித் பிளேக் கூறுகையில், “உள்ளூர் சமூக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ இளைஞர்கள் காரணமாக உள்ளனர்.

லீட்ஸில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கொரோனா பரவல் ஏற்படவில்லை. நகரம் முழுக்க ஆங்காங்கே தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதற்கு இசை நிகழ்ச்சிகள், வீடுகளில் பார்டிகள் நடத்தப்பட்டதே காரணமாக இருக்கிறது.

இதனால் இந்த வார இறுதியில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டு பார்டிகளைத் தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் போலீசாரின் உதவியை நாங்கள் நாடியுள்ளோம்.

கடந்த வாரம் முதல் சட்டவிரோத இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு போலீசார் 10 ஆயிரம் பவுண்ட் வரை அபராதம் விதிக்கும் விதி அமலுக்கு வந்துள்ளது.

கடந்த வார இறுதி நாட்களில் மட்டும் சட்டவிரோத இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏழு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மிகக் கடுமையான அபராதம் விதிக்கும் விதிகள் கொண்டுவரப்பட்டது இந்த நேரத்தில் மிகவும் நல்ல விஷயமாக உள்ளது.

இந்த வைரஸ் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் இளைஞர்கள் மத்தியில் மட்டும் இருக்கப் போவது இல்லை.

அது சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீறும்போது, அது தொற்றுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்புள்ளவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும், இதன் காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காண முடியும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter