இங்கிலாந்தின் Maidenhead நகரில் லண்டன் வாழ் தமிழர்கள் பொங்கல் கொண்டாட்டம்

இங்கிலாந்தின் Maidenhead நகரில், லண்டன் வாழ் தமிழர்கள் பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் பிறந்தநாளையொட்டியும், தமிழர்களின் தை திருநாளையொட்டியும், மேற்கு லண்டனில் உள்ள maidenhead நகரில், பொங்கல் திருவிழா, பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது.

பாப்கார்ன் சாப்பிட்டது ஒரு பாவமா? – பிரிட்டனைச் சேர்ந்தவருக்கு நேர்ந்த சோகம்

Maidenhead தமிழர்கள் என்ற அமைப்பினர் முதன்முறையாக மிகச்சிறப்பாக நடத்திய இத்திருவிழாவில், 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். தமிழ் குழந்தைகளும், பெண்களும், பரதம் மற்றும் கிராமிய நடனங்களான கோலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கரகாட்டம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

மேலும், மியூசிக் சேர், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வாழை இலையில் வைத்து பொங்கல் உட்பட அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது.

பிரெக்சிட் மசோதா – இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல்