5 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டதாக கருதப்பட்ட நபர் ஃபேஸ்புக் போஸ்டால் சிக்கினார்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட நபர். (Image: CAMBRIDGESHIRE POLICE)

கேம்பிரிட்ஷேயரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்த நபர் ஃபேஸ்புக் மூலம் கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேம்பிரிட்ஷையரின் விஸ்பெக்கைச் சேர்ந்தவர் ரிக்கார்டாஸ் புய்சிஸ் (35). இவர் கடந்த 2015ம் ஆண்டு தான் வேலை செய்த இடத்தில் இருந்து வெளியே வந்தார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரைப் பற்றி எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இதனால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இந்த நிலையில் ரிக்கார்டாஸ் பெயரில் கடந்த ஆண்டு ஃபேஸ்புக் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. கடந்த மாதம் விஸ்பெச்உட்ல் அவர் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னைத் தேடும் மக்களிடமிருந்து தப்பிக்க தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவருக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ரிக்கார்டாஸ் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்தவர். லிதுவேனியா நாட்டைச் சேர்ந்தவர்களுடன் அவர் வசித்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு சாட்டரிஸில் உள்ள நைட்லேயர் லீக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது கடைசியா அவரை பார்த்ததாக அவருடன் இருந்த லிதுவேனியா நாட்டைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

ரிக்கார்டாஸ் மாயமானதைத் தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். கடந்த ஆண்டு ரிக்கார்டாஸ் பெயரில் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் பல படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இருப்பினும் அது காணாமல் போன ரிக்கார்டாஸ்தானா என்று போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை.

அவர் ஏன் காணாமல் போனார் என்பது புதிராகவே உள்ளது. கடந்த ஜூன் மாதம் அவர் உயிரோடு இருக்கிறார் என்று தெரிந்த பிறகு தேடுதல் வேட்டையில் இறங்கினோம். ஹரேக்ராஃப்ட் சாலையில் ஒரு வனப் பகுதியில் ரிக்கார்டாஸ் கண்டறியப்பட்டார். அந்த பகுதியில் மறைவாக, யாருடனும் பேசாமலேயே அவர் இருந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk