லண்டன்: நள்ளிரவில் தனியாக நடந்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு 12 ஆண்டுகள் சிறை!

Man, jailed, rape, பாலியல், வன்கொடுமை, லண்டன்

தெற்கு லண்டன் லூயிஷாமில் தனியாக சாலையில் நடந்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி இளம் பெண் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் வந்த கார் தவறான பாதையில் செல்வதை அறிந்த அவர் டிரைவரிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த டிரைவர் இளம் பெண்ணை கேட்ஃபோர்ட் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இரவு 11.30 மணி அளவில் இறக்கிவிட்டு சென்றுவிட்டான்.

எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் அந்த பெண் காட்டுப் பகுதியில் நடந்து சென்ற போது, திடீரென்று ஒருவன் வந்து அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு மறைவான இடத்துக்குச் சென்றான்.

அந்த பெண்ணின் வாயில் ஏதோ ஒரு பொருளை வைத்து அடைத்து மூச்சுத் திணறல் ஏற்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

அவன் அங்கிருந்து விலகி சென்ற பிறகு அந்த பெண் கேட்ஃபோர்ட் பிரிட்ஜ் ரயில் நிலையம் வந்து போலீசை தொடர்புகொண்டு நடந்ததை விவரித்தார்.

ஐந்தே நிமிடங்களில் விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணை வன்கொடுமை சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று துரிதமாக விசாரணை நடத்தினர். அங்கு ஆய்வு செய்து, அப்பகுதியில் வசிப்பவர்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது பாலியல் வன்கொடுமை செய்த டானட் புல்போனா (21) என்பவனைக் கண்டறிந்தனர். அவனுடைய ஆடை உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் புல்போனா குற்றம் செய்தது புல்போனா என்பது உறுதியாகவே அவனை போலீசார் கைது செய்தனர்.

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது, வாயை அடைத்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தி கொலை செய்ய முயன்றது என்று இரு பிரிவுகளின் மீது டானட் புல்போனா மீது வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பு…

கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி இந்த இரு குற்றங்களையும் டானட் புல்போனா செய்ததை உல்விச் கிரவுன் நீதிமன்றம் உறுதி செய்தது. தற்போது (நவம்பர் 17) அவனுக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவித்தது.

இந்த இரண்டு குற்றங்களுக்காகவும் டானட் புல்போனா 12 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு விசாரணைக்குத் தலைமை தாங்கிய டிடக்டிவ் கான்ஸ்டபிள் டீன் யங் கூறுகையில், “இது மிக மோசமான, மிருகத்தனமான தாக்குதல்.

நள்ளிரவில் தனியாக நடந்து வந்த பெண்ணை புல்போனா மிகக் கொடூரமாகத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டாலும் விரைந்து போலீசை அழைத்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை அடையாளம் காட்டிய அந்த பெண்ணின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்.

இதன் காரணமாக சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டான். தற்போது அவனுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லண்டன் சாலைகளில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை பிடித்து விரைவில் அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் எங்களின் உறுதிபாட்டை இந்த தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது

” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter

Related posts

வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி

Editor

ரேவ் முட்டாள்கள்: சட்டவிரோத இசை நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்திய போலீசை அடிக்க பாய்ந்த இளைஞர்

Editor

வெஸ்ட் மிட்லான்ட்ஸ்: கத்திக்குத்தில் ஒருவர் பலி… 15 வயது பள்ளி மாணவி உள்பட 5 பேர் கைது!

Editor