நள்ளிரவில் மோதல்… ஸ்விண்டன் போலீசார் சுட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Man shot dead, போலீசார்

ஸ்விண்டனில் நள்ளிரவில் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலை விலக்கிவிட வந்த போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் ஸ்விண்டன் ரோட்போர்ன் சம்மர்ஸ் தெருவில் இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக வில்ட்ஷயர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் இல்லை. போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் சுருண்டு விழுந்தார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2.56 மணி அளவில் அங்கு விரைந்த ஆம்புலன்சில் இருந்த மருத்துவப் பணியாளர்கள் அந்த 57 வயது நபர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஐ.ஓ.பி.சி (The Independent Office for Police Conduct) ஆய்வு நடத்தி வருகிறது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 8ம் தேதி காலை 2 மணிக்கு ஸ்விண்டன் சம்மர்ஸ் தெருவில் இரண்டு பேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 57 வயதான நபர் இறந்துவிட்டார். நடந்தது தொடர்பாக ஐ.ஓ.பி.சி விசாரணை நடத்தி வருகிறது.

போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தால் அது தொடர்பாக ஐ.ஓ.பி.சி விசாரணை நடத்த வேண்டியது அவசியம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

வில்ட்ஷையர் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இதே தகவல் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக “ஐ.ஓ.பி.சி சுதந்திரமான விசாரணை நடந்து வருவதால் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விவரங்களைத் தெரிவிப்பது சரியாக இருக்காது. அந்த பகுதியில் எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று கூறியுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் வயது மட்டுமே வெளியாகி உள்ளது. அவர் யார், எதற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டார் என எந்த ஒரு விவரத்தையும் போலீசார் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் சம்பவம் நடத்த இடத்தில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. ஒரு சில நாட்களுக்கு அந்த பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேருக்கு இடையேயான சண்டையில் போலீஸ் தலையிட்டு ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter